• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன மழைக்கு இதுவரை 27 பேர் பலி

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 27 பேர் பலியாகி விட்டனர்.சென்னையில் நேற்று மட்டும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

வடகிழக்குப் பருவ மழை கடந்த 10 நாட்களாக மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும்நன்றாக மழை பெய்து வருகிறது. சென்னைக்கு அப்பால் வங்கக் கடலில் புயல் சின்னமும் தோன்றி பயமுறுத்திவருகிறது.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழைக்கு தமிழகத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்தனர். இடி, மின்னல் தாக்கியும்,அறுந்து கிடந்த மின்சார ஒயர்களை மிதித்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இவர்கள் இறந்தனர்.

சென்னையில் நேற்று மட்டும் மூன்று பேர் மழை காரணமாக உயிரிழந்தனர்.

பிராட்வே பகுதியில் உள்ள ஆசீர்வாதம் பிரகாசம் தெருவில் முழங்கால் உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.இதில் தற்செயலாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அது தெரியாத சரத்குமார் என்ற 13 வயது சிறுவன் தண்ணீரில்நடந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

கோட்டூர்புரத்திலும் இதே போலவே இளநீர் வியாபாரியான கணேசன் என்பவர் சுவரில் கசிந்திருந்த மின்சாரம்தாக்கி இறந்து போனார்.

இதற்கிடையே மதுரவாயல் சொக்கத்தான் நகர் புதுக்கோவில் தெருவில் சுற்றுச் சுவர் இல்லாத ஒரு கிணறு மழைவெள்ளத்தில் மூழ்கி விட்டது. இதை அறியாத ஒரு வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்தக் கிணற்றில்தவறி விழுந்து பலியானார். அவர் யாரென்று தெரியவில்லை.

படகு சர்வீஸ்:

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளும் மழை நீரில் மிதந்து கொண்டிருப்பதால் தீயணைப்புத் துறையினர்படகு சர்வீசைத் துவக்கியுள்ளனர்.

மீட்புப் பணிகளுக்காகவும், அத்தியாவசியப் பொருட்களை சப்ளை செய்வதற்காகவும் தீயணைப்புத் துறையினர்படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் 15,000 குடிசைகள் நீரில் மூழ்கி விட்டதாகத் தெரிகிறது. அந்தக் குடிசைகளில் வசித்து வந்த மக்கள்,தெர்மோகோல் அட்டைகளையே படகுகளாகப் பயன்படுத்தி அங்குமிங்கும் சென்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜெ.:

இதற்கிடையே சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்றுநேரில் பார்வையிடுகிறார்.

பெரம்பூர், வியாசர்பாடி, செம்பியம் போன்ற வடசென்னை பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்சந்தித்து ஜெயலலிதா ஆறுதல் கூறுகிறார்.

மேலும் அங்கு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் அவர் பார்வையிடுகிறார்.

மதுரையைக் கலக்கிய மழை:

இதற்கிடையே மதுரையிலும் நேற்று இரவு கனத்த மழை பெய்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மழை நீர்"தபதப"வென்று கோவிலுக்குள் புகுந்து விட்டது. இதனால் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் முழங்கால்உயரத் தண்ணீரில் நின்று கொண்டு மிகவும் அவதிப்பட்டனர்.

பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகள் வழக்கம் போல் மழை நீரில் மிதந்து கொண்டிருந்தன.

குமரி மாவட்டத்தில் 3 பேர் பலி:

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு 3 பேர் வரை பலியாகினர்.

ராஜாக்கமங்கலத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு கூலித் தொழிலாளிஇடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

குளித்துறையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மற்றொரு கூலித் தொழிலாளி (வயது 40), அப்போது ஏற்பட்டதிடீர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இம்மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் அதிக அளவாக 3.6 செ.மீ. மழைஅளவு பதிவாகியுள்ளது.

{x

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X