For Daily Alerts
Just In
இந்துயிசம் ஒரு மதமே அல்ல .. கருணாநிதி
சென்னை:
இந்துயிசம் ஒரு மதமே அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
மறைந்த காஞ்சிப் பெரியவர் அடிக்கடி கூறுவார், இந்து மதம் என்பதே கிடையாது. அது ஒரு பெயரில்லாத மதம்என்பார் அவர்.
சிந்து நதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பார்சி இனத்தவர்கள், இந்தியாவில் இருந்தவர்களை இந்துக்கள்என்று அழைக்கத் தொடங்கினர். அதைத் தொடர்ந்தே இந்துக்கள், இந்து மதம் என்ற வார்த்தையே உருவானது.
இந்துயிசம் என்ற வார்த்தை எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் சொந்தமானதல்ல. இந்து என்றால் திருடன் என்று நான்கூறவில்லை. மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கமலபதி திரிபாதி எழுதியுள்ள அகராதியில்தான் அவ்வாறுகுறிப்பிடப்பட்டுள்ள. அதை நான் மேற்கோள் காட்டினேன், அவ்வளவுதான்.
-->


