For Daily Alerts
Just In
மீனாட்சி கோவில் ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் இன்று காலை மீண்டும்திறக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் நீண்ட காலமாக பூட்டப்பட்டுக்கிடந்தது.
இப்போது ரூ.15 லட்சம் செலவில் அது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சபாநாயகர் காளிமுத்து முன்னிலையில், இந்து அறநலையத்துறைஅமைச்சர் பி.சி. ராமசாமி இன்று காலை திறந்து வைத்தார்.
மதுரை மாவட்ட கலெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஆயிரங்கால் மண்டபத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
புதுப் பொலிவு பெற்ற மீனாட்சி அம்மன் ஆலய மண்டபம்


