சென்னை அருகே கிருஸ்தவ தேவாயலம் சூறை: பைபிள் எரிப்பு
சென்னை:
சென்னை அருகே எண்ணூ<�ர் பகுதியில் சர்ச் சூறையாடப்பட்டுள்ளது. தேவாலயத்தில் இருந்த பைபிள் உள்ளிட்டபுனிதப் பொருள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
எண்ணூ<�ர் வள்ளுவர் நகரில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு மைக்கேல் பீட்டர் என்பவர் இங்கு போதகராகஉள்ளார்.
நேற்று முன் தினம் இரவு வழிபாடு முடிந்த பிறகு அனைவரும் சென்று விட்டனர்.
பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் மைக்கேல் பீட்டர் சர்ச்சைத் திறந்து உள்ளே சென்றபோதுஅங்கு சேர், டேபிள்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியல், மைக்,திரைச்சீலைகள் போன்றவை சேதப்படுத்தப்பட்டிருந்தன.
சர்ச்சின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதன் வழியாகத் தான் விஷமிகள் புகுந்து இந்தத் தாக்குதலைநடத்தியுள்ளனர்.
தேவாலயத்தில் இருந்த பைபிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து எண்ணூ<�ர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு கிருஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனமும் பா.ஜ.க., இந்துமுன்னணி, சங்கராச்சாரியார் ஆகியோர் ஆதரவும் தெரிவித்துள்ள நிலையில் இந்த சர்ச் மீதான தாக்குதல்நடந்துள்ளது.
-->


