• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் எம்.பிக்கு அடி- உதை

By Staff
|

டெல்லி:

நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பியை சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. அடித்து உதைத்தார். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லோக்சபாவில் இன்று காலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. வழக்கமாக சட்டசபைகளில் எம்.எல்.ஏக்கள் கெட்டவார்த்தைகளில் திட்டிக் கொள்வதும் அடித்து கொள்வதும், மாற்றுக் கட்சியினரின் வேட்டியை உருவி மாலையாகப் போட்டுக்கொள்வதும் வழக்கம். அதிலும் 1989ல் நடந்த தமிழக சட்டசபைக் கலவரம் உலகப் பிரசித்தி பெற்றது.

ஆனால், நாடாளுமன்றத்தில் இதுபோன்ற கேவலம் இதுவரை அரங்கேறியதில்லை. எவ்வளவு சூடான விவாதம் நடந்தாலும்அடிதடி அளவுக்குப் போனதில்லை. நிலைமை முற்றினால் மூத்த தலைவர்கள் தலையிட்டு அனைவரையும்அமைதிப்படுத்திவிடுவார்கள். அல்லது அவையை சபாநாயகர் ஒத்தி வைத்து பிரச்சனையை முற்றவிடாமல் தடுத்துவிடுவதுவழக்கம்.

இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தில் உத்தரப் பிரதேச எம்.பிக்கள் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

மெஜாரிட்டி இழந்த பா.ஜ.க- பகுஜன்:

உத்தரப் பிரதேசத்தில் இப்போது பகுஜன் சமாஜ் கட்சி- பாரதிய ஜனதா கூட்டணி அரசு நடந்து வருகிறது. மாயாவதி முதல்வராகஉள்ளார். ஆனால், அமைச்சரவையில் இடம் கிடைக்காத 13 பா.ஜ.க. எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டனர்.

இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது. ஆனால், இந்த உண்மையை பா.ஜ.கவும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஏற்கமறுக்கின்றன.

இதனால் சட்டசபையைக் கூட்டி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என சமாஜ்வாடி கட்சி கோரி வருகிறது. இதை அம்மாநில கவர்னரும் மாயாவதியும் ஏற்க மறுத்து வருகின்றனர். கவர்னர் கிட்டத்தட்ட பா.ஜ.க. தலைவர் போல செயல்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கவர்னரா? பா.ஜ.க. தலைவரா?:

இந் நிலையில் உ.பி. விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று வெடித்தது. இன்று லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்தவுடன் உ.பி.நிலவரம் குறித்த ஒத்தி வைப்புத் தீர்மானத்தின் மீது விவாதிக்க வேண்டும் என முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிஎம்.பிக்கள் கோரினர்.

மேலும் கவனர்னர் விஷ்ணு காந்த் சாஸ்திரி பா.ஜ.க. தலைவராகவே மாறிவிட்டார் எனவும் மெஜாரிட்டி இழந்துவிட்டமாயாவதி- பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் கோரினர்.

ஆனால், இதற்கு பா.ஜ.க. மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சமாஜ்வாடி எம்.பிக்களுக்கும் பா.ஜ.க- பகுஜன் சமாஜ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

கிரிமினல்கள்...:

அப்போது பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. ரஷீத் ஆல்வி ஹமித், சமாஜ்வாடி கட்சியில் உள்ளவர்கள் அனைவருமேகிரிமினல்கள் என்றார். மேலும் முலாயம் சிங் யாதவை தரக் குறைவாகப் பேசினார். இதை பா.ஜ.க. எம்.பிக்களும் இருக்கையைத்தட்டி வரவேற்றனர்.

அடித்து கீழே தள்ளி...

இதையடுத்து சமாஜ்வாடி கட்சியின் எம்.பிக்கள் அவர் மீது பாய்ந்தனர். அதில் தேவேந்திர சிங் என்ற எம்.பி. நேராக ஹமித் மீதுபாய்ந்து அடித்து கீழே தள்ளி மிதித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பா.ஜ.க. எம்.பிக்கள் இருக்கையைத் தட்டுவதை கைவிட்டு வாயடைத்து நின்றனர்.

நிலைமை மிகவும் மோசமானதால் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் ஆகியோர் விரைந்து வந்து சண்டையிட்ட எம்.பிக்களை சமாதானப்படுத்தி பிரித்தனர்.

அவர்களை பிற கட்சி எம்.பிக்களும் சிரமப்பட்டு இழுத்து இருக்கைகளில் அமர வைத்தனர்.

தொடர்ந்து மோதல்:

ஆனால், சமாஜ்வாடி எம்.பிக்கள் இருக்கையில் அமர்ந்தாலும் கூட பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பியான ஹமித் தொடர்ந்துநின்றவாரே கத்திக் கொண்டிருந்தார்.

என்னை அடித்த தேவேந்திர சிங் யாதவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியவண்ணம் அவையின் மையப்பகுதிக்கு ஓடி வந்தார். அவருக்கு ஆதரவாக பிற பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்களும் அங்கு வந்து கோஷம் போட்டனர்.

இதையடுத்து அவர்களை மீண்டும் தாக்க சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் ஆவேசமாக வந்தனர். ஆனால், அவர்களை கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி எம்.பிக்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து நீண்ட நேர கூச்சல்- குழப்பத்துகுப் பின்னர் அமைதி திரும்பியது.

அப்போது பேசிய சபாநாயகர் மனோஜகர் ஜோஷி, இங்கு நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தவறு செய்தவர்கள் மீதுநாடாளுமன்ற விதிகளின் கீழ் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

கவர்னரின் பெட் ரூம்...:

முன்னதாக அவையில் பேசிய சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்,

கவர்னர் என்பவர் நடுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டும், ஒரு அரசு தனது எம்.எல்.ஏக்கன் ஆதரவையே இழந்துநிற்கிறது. நியாயமான கவர்னர் என்றால் சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டி நிரூபிக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்.

ஆனால், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு கவர்னர் நடந்து வருகிறார்.

எங்கள் மெஜாரிட்டியை முதலில் நிரூபிக்க வேண்டும் என்கிறார் இந்த கவனர்னர். அவரது பெட்ரூமில் போயா நாங்கள்மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும். அவையைக் கூட்ட வேண்டியது தானே. அதை ஏன் செய்ய மறுக்கிறார் இந்த கவர்னர்? என்றுகேட்டார்.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X