அப்பா திட்டியதால் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை:
சென்னை மருத்துவக் கல்லூரியில் 4வது ஆண்டு படித்து வந்த மாணவர், அப்பா திட்டியதால் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஆறுமுகம். இவரது மனைவி திலகவதியும் ஒரு டாக்டர். இவர்களது மகன்யுவராஜும் எம்.பி.பி.எஸ். நான்காவது ஆண்டு படித்து வந்தார்.
அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக அவர் யுவராஜ் படித்து வந்தார்.
சரியாகப் படிக்காமல் அவ்வப்போது வெளியில் சென்று வந்ததால், யுவராஜை அவரது அப்பா திட்டியுள்ளதாகத்தெரிகிறது. இதனால் மனம் உடைந்த யுவராஜ், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அப்பாவும், அம்மாவும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுப் போன பின், வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
இரவில் ஆறுமுகமும் திலகவதியும் வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம்தட்டிப் பார்த்த பின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தான் யுவராஜ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-->


