For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலை மோசடி: மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாறப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 150 பேர் கோலாலம்பூரில் சாப்பாட்டுக்கேவழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

தமிழகம், ஆந்திரம், கேரளத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் தலா ரூ. 1.5 லட்சம் வரை ஏஜென்டுகளிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.இவர்களுக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி மலேசியா அழைத்து வந்த சென்னையைச் சேர்ந்த அசோசியேட்டட் டூர்ஸ்மெட்ராஸ் லிமிட்டெட் என்ற நிறுவனமும் மிதுன் டிராவல்ஸ் என்ற நிறுவனமும் இந்த மோசடியைச் செய்துள்ளன.

மலேசியாவைச் சேர்ந்த கோபிஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அசோசியேட்டட் டூர்ஸ்மெட்ராஸ் லிமிட்டெட் நிறுவனம் இந்த ஏழைகளிடம் பணம் கறந்துள்ளது.

அதே போல மலேசியாவில் உள்ள சின் வெல் பாஸ்ட்னர்ஸ், டோங் யங் மெட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக மிதுன் டிராவ்ல்ஸ் நிறுவனம் பணம் வாங்கியுள்ளது.

மாதம் 15,000 சம்பளம் தருவதாகவும், கட்டுமானத் தொழில் வேலை தருவதாகவும், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசம்என்றும் கூறி இந்த படிப்பறிவற்ற இந்தியர்களை இந்த டிராவல்ஸ் நிறுவனங்கள் மலேசியாவுக்கு அழைத்து வந்தன.

ஆனால், அங்கு போய்ச் சேர்ந்தவுடன் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது இந்த ஏழைகளுக்குத் தெரிந்தது.

கோபிஸ் கன்ஸ்ட்ரக்ஷன், சின் வெல் பாஸ்ட்னர்ஸ், டோங் யங் மெட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்தத் தொழிலாளர்கள்சென்றபோது, 15,000 ரூபாய் சம்பளம் எல்லாம் கிடையாது, உணவு கிடையாது, தங்க இடம் தர முடியாது என்று கூறியுள்ளனர்.

அடிமாட்டுக் கூலி தான் தர முடியும் என்று கூறிவிட்டனர். மலேசியாவில் அவர்கள் சொன்ன ஊதியத்தை வாங்கிக் கொண்டுபேஸ்ட், பிரஷ் கூட வாங்க முடியாது, 3 வேலை சாப்பிடக் கூட முடியாது என்பதை உணர்ந்த இவர்களில்பெரும்பான்மையானவர்கள் வேலையில் சேர மறுத்துவிட்டனர்.

மற்றவர்கள் வேறு வழியில்லாமல் காண்ட்ராக்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு வேலையில் சேர்ந்துவிட்டனர். மற்றதொழிலாளர்கள் கேட்பாரற்று தெருவில் நின்றனர். பசி அதிகமானதையடுத்து இந்தியத் தூதரகத்தின் எதிரே இந்தத் தொழிலாளர்கள்கடும் வெயிலில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சிலர் மயங்கி சரியவே இந்தியத் தூதரகமும் சில மலேசிய மனித உரிமைஅமைப்புகளும் இதில் தலையிட்டன.

இப்போது இவர்கள் பினாங்கில் உள்ள டோங் யங் தொழிலாளர்கள் விடுதியில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கானஉணவைத் தர விடுதி மறுத்துவிட்டது. இதனால், மசூதிகள், தேவாலயங்களில் இருந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது இவர்கள் ஊர் திரும்பக் கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இவர்களை தெனகனிடா என்ற சமூக நலஅமைப்பு தான் காப்பாற்றி விடுதியில் சேர்த்துவிட்டுள்ளது. இவர்களுக்காக நீதிமன்றத்திலும் போராட அந்த அமைப்புதிட்டமிட்டுள்ளது.

இந்த அமைப்பின் தொண்டரான ஏஜில் பெர்னாண்டஸ் கூறுகையில், உணவு தருவதே பெரிய பிரச்சனையாக உள்ளது. அதை விடபெரிய பிரச்சனை அந்தத் தொழிலாளர்கள் மன நிலை பாதிக்கப்பட்டு வருவது தான். பெரும்பாலான தொழிலாளர்கள் வெறித்தபார்வையுடன் அமர்ந்துள்ளனர். அடிக்கடி ஓலமிட்டு அழுகின்றனர். அவர்களுக்கு மனச் சிதைவு ஏற்பட்டு வருகிறது என்றார்கவலையுடன்.

வீட்டையும், நிலத்தையும், நகைகளையும், பிற சொத்துக்களையும் விற்றுவிட்டு பணம் தந்த இவர்கள் மீண்டும் ஊருக்குப் போய்என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

இந் நிலையில் இந்தப் பிரச்சனையில் மலேசிய அரசு தலையிட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியமும் திரும்பிச் செல்லவிரும்புவர்களுக்கு விமான டிக்கெடுக்கும் எடுத்துத் தருமாறு கோபிஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தன்னிடம் வேலைக்கு சேருவதற்காக மலேசியா வந்த 45 தொழிலாளர்களில் 19 பேருக்கு மட்டுமே இந்தியா திரும்படிக்கெட் எடுத்துத் தந்துள்ளது கோபிஸ் நிறுவனம்.

கோபிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கதிர்வேலு வெள்ளைச்சாமியை நிருபர் தொடர்பு கொண்டபோது, நாங்கள் இவ்வவுதான் ஊதியம் தருவோம் என்று முன்பே கூறிவிட்டோம். சென்னையைச் சேர்ந்த அசோசியேட் டூர்ஸ் நிறுவனம் இந்தத்தொழிலாளர்களிடம் என்ன உறுதிமொழி தந்தது என்று தெரியவில்லை. அதை வைத்து எங்களைக் குறை கூற முடியாது என்றார்கோபமாக.

டோங் யங் மெட்டல்ஸ் நிறுவனத்துக்கு ஆள் சேர்க்கும் மலேசிய ஏஜென்ட் குர்ஜீத் சிங் கூறுகையில், ரூ. 15,000 ஊதியம் வாங்கித்தருவதாக சென்னையின் மிதுன் டிராவல்ஸ் கூறியதாக இந்தத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்கான ஆதாரம் ஏதும்இவர்களிடம் இல்லை என்றார் திமிருடன்.

இது குறித்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதர் வீனா சிக்ரியைத் தொடர்பு கொண்டபோது, இந்தியத் தொழிலாளர்கள் இவ்வாறுஏமாற்றப்படுவதைத் தடுக்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் அவசியம் என்றார்.

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடந்திருப்பது இது முதன்முறையல்ல. இது குறித்து எத்தனையோ செய்திகள்வந்துவிட்டபோதும் படிப்பறிவில்லாத ஏழைகள் மீண்டும் மீண்டும் இதில் ஏமாறுவது பெரும் கவலை தருகிறது.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X