For Daily Alerts
Just In
சேலம் அருகே கார்-லாரி மோதல்: 2 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சேலம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது இன்று காலை ஒரு லாரி பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
காரில் பயணம் செய்த மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
இவ்விபத்து தொடர்பாக லாரியின் டிரைவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
-->


