For Daily Alerts
Just In
நக்சலைட் வேட்டையைக் கண்டித்து கைதிகள் உண்ணாவிரதம்
சேலம்:
நக்சலைட் வேட்டையைக் கண்டித்து சேலம் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட் வேட்டையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதுவரை ஐந்து பெண்கள்உள்பட 26 பேர் பிடிபட்டுள்ளனர். சிவா (அ) பார்த்திபன் என்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
போலீஸாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து சேலம் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சுமார் 12 கைதிகள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களும் பல்வேறு நக்சலைட் பிரிவுகளைச்சேர்ந்தவர்கள் தான்.
இந்த உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த சிறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.அவர்களையும் மீறி கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
-->


