கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்து சிறுவன் சாவு
சென்னை:
அப்பாவின் துப்பாக்கியை எடுத்து பார்த்தபோது அதைத் தவறுதலாக இயக்கிய 15 வயது சிறுவன் குண்டடி பட்டு பரிதாபமாக இறந்தான்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவன் ராமச்சந்திர ரெட்டி. பத்தாவது படித்து வந்தான்.
நேற்று மாலை 4 மணிக்கு பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ரெட்டி தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அதில் புல்லட்களும் இருந்தன.
அப்போது சைலன்ஸர் பொருத்தப்பட்ட அந்தத் துப்பாக்கியை ரெட்டி தவறுதலாக இயக்கி விட்டதாகத் தெரிகிறது. இதில் அவனுடைய அடி வயிற்றில் குண்டு பாய்ந்தது.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து மகன் இருந்த அறைக்கு வந்த ரெட்டியின் தாயார் டாக்டர் மைதிலி ரெட்டி, மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து பயந்து போய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


