நகைக் கடை அதிபருக்கு டார்ச்சர்: போலீஸ் அதிகாரிகளுக்கு சிறை
மதுரை:
40 பவுன் திருட்டு நகைகளை வைத்திருப்பதாகக் கூறி நகைக் கடை அதிபரை மிரட்டி அவரிடமிருந்து சிலநகைகளையும் பறித்துக் கொண்ட 2 போலீஸ் அதிகாரிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
மதுரையில் உள்ள ஒரு நகைக் கடையின் அதிபர் சுப்பிரமணியம். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வடக்குபோலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணனும், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும் சுப்பிரமணியத்தின் கடைக்குச்சென்றனர்.
சுப்பிரமணியம் 40 பவுன் வரை திருட்டு நகைகளை வாங்கி வைத்திருப்பதாகவும் அதை உரியவர்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்றும் அவரை அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் மிரட்டினர்.
ஆனால் திருட்டு நகைகளை வாங்கி வைத்திருக்கும் குற்றச் சாட்டையே சுப்பிரமணி மறுத்தார். ஆனால் ஒழுங்காகஅந்த 40 பவுன் நகைகளை ஒப்படைக்காவிட்டால் தொலைத்து விடுவோம் என்று போலீஸ் அதிகாரிகள் மிரட்டிவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் போலீஸ் அதிகாரிகளின் மிரட்டலை எதிர்த்து வழக்குதொடர்ந்தனர்.
இதற்கிடையே கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி சுப்பிரமணியத்தின் வீட்டுக்கு வந்த அந்த இரண்டுபோலீஸ் அதிகாரிகளும் அவரைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டுகாரைக்குடி போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கு வைத்து அவரை மேலும் மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகைகளை கண்ணனும்பாலகிருஷ்ணனும் பிடுங்கிக் கொண்டனர். அவர் வைத்திருந்த ரூ.2,390 பணத்தையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டனர்.
மேலும் மீதமுள்ள 37 பவுன் நகைகளைக் கொடுக்கும் வரை சுப்பிரமணியத்தை விடுவிக்க முடியாது என்றும்அவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து இது தொடர்பாக சிவகங்கை போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் புகார்கொடுத்தனர். ஆனால் அந்தப் புகாரைப் போலீசார் கண்டு கொள்ளவே இல்லை.
பின்னர் சுப்பிரமணியத்தின் நண்பர்கள் சேர்ந்து 27 பவுன் நகைகளை அந்த போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்துஅவரை ஒரு வழியாக வீட்டுக்குக் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே சுப்பிரமணியம் மிரட்டப்பட்ட வழக்கை விசாரித்து வந்த மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பகவதிஅம்மாள் நேற்று மாலை இதற்கான தீர்ப்பை வழங்கினார்.
அப்போது அந்தப் போலீஸ் அதிகாரிகளை நீதிபதி மிகவும் கடுமையாகக் கண்டித்தார். சுப்பிரமணியத்திடம்போலீசார் நடந்து கொண்ட விதத்தையும் நீதிபதி கோபத்துடன் கண்டித்தார்.
மேலும் இதற்காக கண்ணன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் தலா இரண்டுஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி பகவதி அம்மாள்.
-->


