For Daily Alerts
Just In
சென்னையில் திமுக பிரமுகர் கழுத்தை நெறித்து கொலை
சென்னை:
சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரும் திமுக பிரமுகருமான ஒருவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. திமுகவைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வந்தார்.
இவரது வீடு விருகம்பாக்கத்திலும், அலுவலகம் ஆற்காடு சாலையிலும் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு அலுவலகம் சென்ற சின்னக்கண்ணு அங்கேயே தூங்கி விட்டார்.
காலையில் அவருடைய மகன் அங்கே சென்று பார்த்தபோது அங்கு சின்னக்கண்ணு கழுத்து நெறிக்கப்பட்டநிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


