போலீசார் போல நடித்த 3 கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
போலீசார் போல் நடித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனைவழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் வசித்து வருபவர்கள் கஜேந்திர ரெட்டி மற்றும் துளசி ராம ரெட்டி. இவர்களது வீட்டுக்கு கடந்த1989ம் ஆண்டு ஜனவரி மாதம் சுதாகர் ராவ் என்பவரது தலைமையில் நான்கு பேர் அடங்கிய கும்பல் வந்தது.
தங்களை ஆந்திர மாநில போலீஸார் என்றும் திருட்டுப் பொருட்கள் தொடர்பாக வீட்டை சோதனை போடவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கஜேந்திர ரெட்டியும், துளசி ராம ரெட்டியும்கூறினர். ஆனால் வீட்டுக்குள் புகுந்த அந்தக் கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பினர்.
இதையடுத்து கஜேந்திர ரெட்டியும், துளசிராம ரெட்டியும் சப்தம் போட்டனர். இதையடுத்து அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் திருடர்களைத் துரத்தினர்.
இதில் ஒருவன் தப்பி விட்டான். மற்ற மூன்று பேரும் பிடிபட்டனர். தப்பியவனும் பின்னர் பிடிபட்டான்.
அவர்கள் மீது காஞ்சிபுரம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின்போது சுதாகர் ராவ் இறந்துவிட்டார். மற்ற மூன்று பேரான தன்ராஜ், ரமண குமார், சுதர்சன் ராவ் ஆகியோர் மீது தொடர்ந்து கோர்ட்டில்விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் அந்த மூன்று பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
-->


