1,000 இஸ்லாமிய இளைஞர்களுக்கு சிறுதொழில் பயிற்சி
பசென்னை:
இஸ்லாமிய இளைஞர்கள் 1,000 பேருக்கு சிறுதொழில்முனைவோருக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கும்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருச்சி,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின்படி 8வது வகுப்பு வரை படித்த இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் சேரத் தகுதி படைத்தவர்கள்ஆவர். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் நகரப் பகுதிகளில் இருப்பவர் என்றால் ரூ.54,000த்திற்கு மேல்இருக்கக் கூடாது. கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் என்றால் ரூ.39,500க்கு மேல் இருக்கக் கூடாது.
மொத்தம் 1,000 இளைஞர்கள் பயிற்சி வகுப்புக்குத் தேர்வு செய்யப்படுவர். இதில் சேர விரும்புவோர் நிர்வாகஇயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மை நல அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு தலா ரூ.25,000 வரை வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கவும்தமிழக அரசே ஏற்பாடு செய்யும்.
-->


