மதிமுக, பா.ம.க. அடங்கி புதிய அணி: கண்ணப்பன் தீவிர முயற்சி
சென்னை:
ஓய்வு பெற்ற நீதிபதியைத் தாக்க முயன்ற வழக்கில் வழக்கில் கோர்ட்டில் சரணடைந்து சென்னை மத்தி. சிறையில்அடைக்கப்பட்டிருக்கும் பாமக தலைவர் ஜி.கே.மணியை மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் சென்றுபார்த்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது மக்கள்தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகிகளும் உடன்இருந்தனர்.
சமீபத்தில் தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் வேலூர் சிறைக்குச் சென்று கண்ணப்பன் சந்தித்தார்.
அதிமுகவில் சேர்த்துக் கொள்வதாக ஜெயலலிதா கூறியதால் தனது கட்சியின் பொத் குழுவைக் கூட்டி கட்சியைக்கலைப்பதாக கண்ணப்பன் அறிவித்தார். ஆனால், அவரை ஜெயலலிதா கட்சியில் சேர்க்காமல் நோஸ் கட் செய்தார்.இதனால் கண்ணப்பன் மீண்டும் மூன்றாவது அணியை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந் நிலையில் வைகோவையும் மணியையும் அவர் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
திமுக-காங்கிரஸ், பா.ஜ.க.- அதிமுக கூட்டணி உருவாகும் என்று கருதும் கண்ணப்பன் அந்த நிலையில்தனித்துவிடப்படும் பா.ம.க, மதிமுக ஆகியவற்றின் தலைமையில் மூன்றாவது அணியை அமைக்க முயன்றுவருகிறார்.
புலிகளின் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்ட மதிமுகவையும் பா.ம.கவையும் காங்கிரஸ் தனது கூட்டணியில் சேர்க்காது.அதிமுக இருக்கும் இடத்துக்கு மதிமுக போகாது என்பது கண்ணப்பனின் கணக்கு.
இது தொடர்பாக வைகோவுடன் அவர் சிறையில் பேசினார். ஆனால், வைகோ ஏதும் பிடி கொடுக்கவில்லை என்றுதெரிகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சொத்து குவித்தவர் கண்ணப்பன் தான்.இதனால் புதிய அணியை நடத்த பணப் பிரச்சனை இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார். செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாக கூறி வருகிறார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications