கோவிலுக்குள் வாலிபர் தீக்குளித்து சாவு: கோவையில் பெரும் பதற்றம்
கோயம்புத்தூர்:
அவினாசியில் அமைந்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குள் புகுந்தஒரு வாலிபர் அங்கிருந்த பூசாரியை விரட்டிவிட்டு கர்ப்பகிரஹகத்துள் நுழைந்து தீக்குளித்து இறந்தார்.
அவரைத் தீவிரவாத என நினைத்த பக்தர்கள் அங்கிருந்து அலறியவண்ணம் சிதறி ஓடினர். கோவிலில் தீவிரவாதிவெடிகுண்டுத் தாக்குதல் நடத்திவிட்டதாக தகவல் பரவவே அவிநாசியிலும் அதைத் தொடர்ந்துகோயம்புத்தூரிலும் பெரும் பதற்றம் பரவியது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதியையொட்டி தமிழகத்தில் கோவில்களைத் தாக்கதீவிரவாதிகள் மாநிலத்துக்குள் ஊடுருவியிருப்பதையடுத்து பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளும் பாதுகாப்புஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் இன்று காலை அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு 30 வயது மதிக்கத்தக்கஒரு மர்ம நபர் வந்தான். நேராக அந்த வளாகத்தில் உள்ள அம்மன் ஆலயத்தில் புகுந்தான். பின்னர் கருவறைக்குள்சென்ற அவன் அங்கிருந்த பூசாரியைக் கத்தியைக் காட்டி மிரட்டி அவரை வெளியே விரட்டினான்.
பூசாரி வெளியே சென்றதும் கருவறையின் கதவின் மீது ஒரு பேப்பரை ஒட்டினான். அதில் என்னை யாரும்தொல்லைபடுத்த வேண்டாம். அம்மனின் உத்தரவை நான் நிறைவேற்றுகிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
பின்னர் அந்தக் கதவை உள்பக்கமாக அவன் பூட்டிக் கொண்டான். பின்னர் சிறிது நேரத்தில் கருவறைக்குள்பயங்கர அலறல் சத்தம் கேட்டது. கர்ப்பகிரஹத்துக்குள் இருந்து தீ நாக்குகள் வெளியே வந்தன. இதனால் அந்தவாலிபர் குண்டு வைத்து தன்னை சிதற வைத்துக் கொண்டதாகக் கருதிய பக்தர்களும் பூசாரியும் அங்கிருந்து தப்பிஓடினர்.
சுமார் 20 நிமிடம் எரிந்த தீ பின்னர் அணைந்தது. கர்ப்பகிரகத்துக்குள் இருந்து தொடர்ந்து புகை மட்டும் வந்தது.அதற்குள் தகவல் தெரிந்து போலீசாரும் அங்கு வந்துவிட்டனர்.
போலீசாரும் கோவில் ஊழியர்களும் கர்ப்பகிரஹகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுபார்த்தபோது அந்த வாலிபர் எரிந்து கரிக் கட்டையாகக் கிடந்தார்.
அங்கே ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. கர்ப்பகிரஹம் முழுவதும் சேதமடைந்திருந்தது.
அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். அந்த உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார்கொண்டு சென்றனர்.
இதையடுத்து அவிநாசியிலும் கோவை நகரிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதத் தாக்குதல்நடந்துவிட்டதாக போலீசாரே கூறவே கோவை, திருப்பூர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
மக்கள் அனைவருக்கும் கடந்த 1998ம் ஆண்டு ஏற்பட்ட கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்புகளும் அதைத்தொடர்ந்து நடந்த மதக் கலவரமும் அதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியான சம்பவமும் தான் நினைவுக்கு வந்தது.
இதனால் சாலைகளும் வெறிச்சோடின. மக்கள் மத்தியில் பெரும் பீதி பரவியது.
தமிழகத்தில் உள்ள கோவில்களைத் தகர்ப்பதற்காக 25 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகத்தெரிகிறது. இவர்களில் இதுவரை 13 தீவிரவாதிகளை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவம் நடந்தால் அது தீவிரவாதத் தாக்குதலாகவே போலீசாரும் கருதினர். உடனே, உயர்அதிகாரிகளுக்கும் தகவல் தந்தனர். தீவிரவாதத் தாக்குதல் எனக் கருதிய உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குவந்துவிட்டனர்.
இது தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்று தெரியவந்த பின்னர் தான் நிம்மதியடைந்தனர்.
-->


