கோவில் பாதுகாப்பு படைகள் அமைப்பு: சங்கராச்சாரியாருக்கு பாதுகாப்பு
சென்னை:
தமிழகத்தை முக்கியப் பிரமுகர்களையும் கோவில்களையும் தாக்கி மதக் கலவரத்தைத் தூண்ட தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதால்கோவில்களுக்கும் காஞ்சி சங்கராச்சாரியார், இல.கணேசன் போன்ற பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பெரியகோவில் உள்ளிட்ட கோவில்களைப் பாதுகாக்க பொது மக்களையும் பக்தர்களையும் கொண்டகோவில் பாதுகாப்புக் கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது போன்ற படைகள் மாநிலத்தின் பிற பகுதிகளும் அமைக்கப்பட்டுவருகின்றன.
இந்த கோவில் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இரவு பகலாக கோவில்களில் கண்காணிப்புப் பணிகளில்ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், தஞ்சாவூர் பெரிய கோவில், திருப்பதி, பிள்ளையார் பட்டி, குன்றக்குடி கோவில், மீனாட்சி அம்மன்கோவில், சென்னை பார்த்தசாரதி ஆலயம், வடபழனி, திருவண்ணாமலை ஆலயம், திருத்தணி, திருச்செந்தூர் கோவில்களில்மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பக்தர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
தஞ்சையில் டி.ஐ.ஜி. ஜா தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தின் ரயில் நிலையங்கள் தவிர மசூதிகள்மற்றும் சர்ச்களிலும் சோதனை நடத்த ஆரம்பித்துள்ளனர் போலீசார்.
மாநிலம் முழுவதும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் ரயில் தண்டவாளங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன. மேலும்வாகன சோதனைகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சி சுவாமிகளுக்கு பாதுகாப்பு:
இதற்கிடையே காஞ்சி சங்கராச்சாரியார், பா.ஜ.க. தலைவர்களான இல.கணேசன், ராஜா, இந்து முன்னணி ராமகோபாலன்ஆகியோரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியத் தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதையடுத்து இன்று உள்துறைச் செயலாளர் சையத் முனீர்ஹோதா தலைமையில் கோட்டையில் முக்கிய கூட்டம் நடந்தது. அதில் டி.ஜி.பி. நெயில்வாலும் கலந்து கொண்டார்.
இதில் முக்கிய மதத் தலைவர்களும், இந்து மதவாத அமைப்புகளின் தலைவர்களும் பா.ஜ.கவினருக்கும் பாதுகாப்பைபலப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.
பஸ் நிலையங்களிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மாறுவேடத்திலும் போலீஸார் உலவி வருகின்றனர்.இதுதவிர பொதுமக்கள் அதிகம் கூடும் தியேட்டர்களிலும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-->


