ரயில் பயணிகளிடம் 31 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இரு பயணிகளிடம் 31 கிலோ வெள்ளிக்கட்டிகள் பிடிபட்டன.இதுதொடர்பாக இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாதிகள் மிரட்டலையடுத்து தமிழகம் முழுவதிலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீஸார் தீவிரகண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகினறனர்.
அதுபோலவே, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் இரவு 9.30 மணிக்கு கோவை செல்வதற்காக ஜியா உல் என்ற பயணி வந்தார். அவரது உடமைகளைசோதனை செய்து பார்த்தபோது, 12 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருந்தன.
அதற்கான ரசீது எதுவும் இல்லை. இதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்தனர்.
அதேபோல, குந்த் ஹீராலால் என்பவர் பெங்களூர் மெயிலில் ஏறுவதற்காக வந்தார். அவரிடம் 19 கிலோவெள்ளிக் கட்டிகள் மற்றும் நகைகள் இருந்தன. அவரையும் போலீஸார் கைது செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 2லட்சம்ஆகும்.
-->


