ஆவடியில் ராணுவ டாங்க் சுவற்றில் மோதியது: சோதனை அதிகாரி சாவு
சென்னை:
சென்னை அருகே ஆவடியில் உள்ள ராணுவ டாங்க்கை ஓட்டி சோதனை செய்து பார்த்த ராணுவ அதிகாரி விபத்தில்சிக்கி பலியானார்.
சென்னை அருகே உள்ளஆவடியில் டாங்குகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும்டாங்க்குகளை ராணுவ அதிகாரிகள் ஓட்டிப் பார்த்து பரிசோதனை செய்வார்கள்.
அது போல புதிதாக தயாரிக்கப்பட்ட டாங்க் ஒன்றை கேதார்நாத் என்ற அதிகாரி ஓட்டிப் பார்த்து சோதனை செய்துகொண்டிருந்தார். ராணுவ வளாகத்துக்குள்ளேயே உள்ள இதற்கான ஓடு பாதையில் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
தாழ்வான ஒரு சுரங்கப் பாதை வழியாக அவர் சென்றபோது, எதிரே திடீரென்று ஒரு மாடு குறுக்கிட்டது.இதையடுத்து மாட்டின் மீது மோதி விடாமல் தவிர்க்க டாங்ககை வேறு பக்கம் திருப்பினார். அப்போது டாங்க்சுரங்கப் பாதை சுவற்றின் மீது மோதியது.
இதில் டாங்கியின் ஒரு பகுதி நசுங்கியது. அப் பகுதியில் இருந்த கேதார்நாத்தின் தலையும் நசுங்கியது. அவர் அந்தஇடத்திலேயே இறந்தார்.
ஆவடி தொழிற்சாலைக்குள் யாரும் வர முடியாத அளவுக்கு கடும் பாதுகாப்பு உள்ளது. ஆனால் மாடு எப்படிவந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
அருகில் உள்ள ராணுவ பால் பண்ணையில் இருந்து இந்த மாடு வந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
இதுகுறித்து வழக்கப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-->
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications