பென்ஷனுக்காக 13 ஆண்டுகளாக போராடிய தியாகி
விருதுநகர்:
சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவருக்கு 13 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு தியாகிகள் பென்ஷன் வழங்கசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். 77 வயதாகும் மாரியப்பன் சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார். நகராட்சிப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
பணி ஓய்வு பெற்றதில் இருந்து வறுமையில் வாடி வருகிறார். அதுவரை தனக்கு தியாகிகள் பென்சன் ஏதும் கோராதமாரியப்பன் தன் வறுமை காரணமாக அரசின் நிதியுதவியைக் கோரினார்.
காலெக்டர் அலுவலகத்துக்கும், கிராம அதிகாரியின் அலுவலகத்துக்கும் அலைந்தது தான் மிச்சம். அவரை யாரும்கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து அந்த ஊரைச் சேர்ந்த சிலரது உதவியுடன் 1989ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தைஅணுகினார்.
தான் மிகவும் வறுமையில் வாடுவதால், தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தனக்கும் வழங்கப்படவேண்டும் என்று கோரி வழக்குத் தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 13 காலமாக அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுவந்தது.
இத்தனை காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் இப்போது தான் தீர்ப்பு கிடைத்துள்ளது. மாரியப்பனுக்குதியாகிகள் பென்ஷன் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாரியப்பன் கூறுகையில், இந்தத் தீர்ப்பினால் எனக்கு நியாயம் கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்கிறேன். எனக்கு வசதிஇருந்திருந்தால் நான் இந்த உதவியே கோரியிருக்க மாட்டேன். வசதியின்மையால் தான் இந்த பென்சனையே நான் கேட்டேன் என்றார்.
-->


