For Daily Alerts
Just In
புலிகள், இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டு
வாஷிங்டன்:
இலங்கையில் கூட்டாட்சி முறையில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அரசும் விடுதலைப் புலிகளும் முன் வந்துள்ளதை அமெரிக்கா மனம்திறந்து பாராட்டியுள்ளது. இதற்காக புலிகளையும் இலங்கை அரசையும்சல்யூட் செய்வதாக கூறியுள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர்,
இது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவதில் நார்வே நாட்டின் உதவி மிகவும் மெச்சத்தக்கது. அந்த நாட்டுக்கும் எங்கள் வணக்கத்தைதெரிவிக்கிறோம்.
அடுத்த கட்டமாக ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகிய விஷயங்களில் இரு தரப்பினரும் ஈடுபாடு காட்டி பேச்சுவார்த்தைகளைமுன்னேற்றி நடத்திச் செல்ல வேண்டும். இலங்கையில் அமைதி என்பது அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் வளர்க்கும் உதவும்என்றார்.


