For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எழும்பூர்-கடற்கரை அகல ரயில் பாதை: பிப்ரவரியில் தயாராகும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

2003ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையிலான அகல ரயில் பாதைரெடியாகி விடும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர், கடற்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதை மாற்றப்பட்டு, அகலரயில் பாதையாக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு பெருமளவில் அசெளகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

பல மின்சார ரயில்கள் திடீர் திடீரென நிறுத்தப்படுகின்றன. பாதை மாற்றிவிடப்படுகின்றன. அவற்றின் நேரமும்மாற்றப்படுகிறது.

இதனால் பயணிகள் ஆங்காங்கே கலாட்டாவில் இறங்கி வருகின்றனர்.

இந் நிலையில் அகல ரயில் பாதை பணிகளைப் பார்வையிட்ட பொது மேலாளர் ஆனந்த் நிருபர்களிடம்கூறுகையில்,

பயணிகளுக்கு தொல்லை நேருவதைத் தவிர்க்க இந்தப் பணிகளை மிக விரைவாக முடிக்க உள்ளோம். முதல்கட்டமாக ஜனவரி 1ம் தேதிக்குள் பூங்கா வரையிலான பாதை முடிவடைந்து ரயில்கள் இயக்கப்படும்.

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் கடற்கரை வரையிலான பணிகள் முழுமை பெற்று ரயில்கள் முழு அளவில்இயக்கப்படும். 2 மாத காலத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து விடும் என்பதால் ரயில் பயணிகள் சற்றுபொறுமை காத்து வளர்ச்சிப் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

2005ம் ஆண்டுக்குள் செங்கல்பட்டு வரையிலான பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு விடும் என்றார்அவர்.

முன்பதிவு வசதி விரிவாக்கம்:

இதற்கிடையே, சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலும் திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் அமைக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் முன்பதிவுகவுண்டர்களை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்-பாண்டி. ரயில்கள் ரத்து:

இதற்கிடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால்,விழுப்புரம்-பாண்டிச்சேரி இடையிலான ரயில் போக்குவரத்து வரும் 10ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.

இதனால் இப்பாதையில் ரயில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்படும்.

இப்பாதையில் செல்லும் தாம்பரம்-பாண்டிச்சேரி, விழுப்புரம்-பாண்டிச்சேரி (மொத்தம் 3 ரயில்கள்) ஆகிய ரயில்கள்முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இதுதவிர பாண்டிச்சேரி-திருவண்ணாமலை இடையிலான ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டுவிடும். இந்த ரயில்கூட மாற்றுப் பாதையில் தான் விழுப்புரம் சென்றடையும்.

தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X