மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து பேரணி: திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆவேசம்
சென்னை:
மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ் காந்தி சிலையிலிருந்து கிளம்பிய இந்த பேரணி, ஆளுநர் மாளிகையிலமுடிவடைந்தது.
இதில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் திருமாவளவன், பல்வேறு கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள்கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி கோஷமிட்டனர்.ஜெயலலிதா அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பேரணி புறப்படும் முன் பேசிய திருமாவளவன், நாட்டில் 2 சதவீதமே உள்ள பிராமணர்கள் பிறரை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தில் இருந்துவருகின்றனர். இதைத் தக்க வைத்துக் கொள்ளவே இந்த மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தந்தை பெரியாரும்அம்பேத்கரும் இந்து மதத்தில் உள்ள ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடினார்கள். அந்தப் போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளதுஎன்றார்.
பின்னர் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தலித்களை தொடர்ந்து கேவலமாகப் பேசி வருகிறார் காஞ்சி சங்கராச்சாரியார். அவர் அதை நிறுத்தவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் குளித்துவிட்டு கோவிலுக்கு வரலாம் என்று கிண்டல் அடித்துள்ளார். உழைக்கும் மக்களை கிண்டல்செய்யும் சங்கராச்சாரியார் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்றுகாஞ்சி மடம் நோக்கி தலித்கள் கண்டன பேரணி நடத்துவார்கள்.
காஞ்சியில் உட்கார்ந்து கொண்டு சங்கராச்சாரியார் போடும் தாளத்துக்கு கோட்டையில் உட்கார்ந்திருக்கும் ஜெயலலிதா ஆடுகிறார்என்றார்.
இந்தப் பேரணியைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.
-->


