சேலம் அரசு மருத்துவமனை அவலம்: மனித உரிமை கமிஷன் விசாரணை ஆரம்பம்
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால் 8 மாதங்களே நிரம்பிய ஒரு ஆண் குழந்தையின் வலதுகை அழுகிப் போய், துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக மனித உரிமை கமிஷன் இன்று தன்விசாரணையைத் தொடங்கியது.
ஹூசேன் என்ற அந்தக் குழந்தைக்குக் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
ஆனால் டாக்டர்களோ வெகு அலட்சியமாக ஹூசேனுக்கச் சிகிச்சை அளித்தனர். என்ன சிகிச்சை அளித்தார்களோதெரியவில்லை, அவனுடைய கை நீல நிறமாக மாறத் தொடங்கியது.
இதையடுத்து ஹூசேனின் வலது கை மிகவும் கோரமாக அழுகத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அந்தக் கையைஆபரேஷன் மூலம் துண்டித்து எடுத்தால் தான் அவனுடைய உயிர் பிழைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் ஹூசேனின் வலது கையும் துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சிறப்பு டாக்டர்கள் குழு ஒன்றுசென்னையிலிருந்து சேலத்திற்கு விரைந்தது. குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த அந்தக் குழு, ஹூசேன்நலமுடனே உள்ளதாகவும் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்றும் கூறி விட்டு சென்று விட்டனர். ஆனால்,அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து மூச்சு விடவில்லை.
இந்நிலையில் டாக்டர்களின் அலட்சியம் காரணமாகத் தான் குழந்தையின் வலது கை துண்டிக்கப்பட வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது என்று தமிழக மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாநில மனித உரிமை கமிஷனைச் சேர்ந்த சம்பந்தம், புருஷோத்தமன் ஆகியோர் இன்று சேலம் அரசுமருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஹூசேனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலரிடமும் விசாரணைநடத்தப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.
ஹூசேனுக்கு இந்த அவல நிலை ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான், சேலம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு கர்ப்பிணி மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் இறந்தது தொடர்பாக ஒரு டாக்டர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆனால் டாக்டர் சங்கங்களின் வேலைநிறுத்த மிரட்டலைத் தொடர்ந்து அந்த சஸ்பெண்ட் உத்தரவையே அரசுதிரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-->


