For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்துவட்டி கடைக்காரரிடம் ரெய்ட் நடத்திய வருமான வரி அதிகாரி மீது பயங்கர தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் அநியாய வட்டிக்குப் பணம் கொடுத்து கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்த கந்து வட்டிக்காரனின் வீட்டில் ரெய்ட்நடத்திய வருமான வரித்துறை அதிகாரி பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

மதுரை கீழைத்துரையைச் சேர்ந்தவன் அன்புச்செழியன். மணிக்கு இவ்வளவு ரூபாய் என்று வட்டிக்குப் பணம் கொடுத்து வரும்மதுரை கந்து வட்டிக் கும்பலில் இவனும் ஒருவன்.

அவசரத்துக்கு பணம் வாங்கிவிட்டு வட்டி கட்ட முடியாதவர்களின் வீடுகளில் புகுந்து இந்த கந்து வட்டிக் கும்பல்கள் செய்யும்அட்டகாசம் சொல்லி மாளாது. கடன் வாங்கியவர்களின் வீடுகளில் நுழைந்து பெண்களின் கையைப் பிடித்து இழுப்பது,அவர்களை தகாத உறவுக்கு அழைப்பது போன்ற செயல்களில் இந்தக் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.

வெள்ளை வேட்டி, சட்டை, லேட்டஸ்ட் மோட்டர் சைக்கிள், விரல் நிறைய மோதிரங்கள், மைனர் செயின் என இவர்கள் மதுரையில்வெகு பந்தாவாக சுற்றி வருகிறார்கள்.

இந்த கந்து வட்டிக் காரர்களால் மானம் இழந்த பல குடும்பங்கள் ஊரைவிட்டே ஓடியிருக்கின்றன. மேலும் வட்டி கட்டாதவர்களைவெட்டிச் சாய்க்கவும் இக் கும்பல்கள் தயங்குவதில்லை.

அந்தந்தப் பகுதி போலீசாருக்கும் இக் கும்பல்கள் அவ்வப்போது எலும்புத் துண்டுகளைப் போட்டுவிடுவதால் இவர்களைபோலீசார் கண்டு கொள்வதும் இல்லை. மேலும் இவர்கள் மூலமாக வட்டிக்குப் பணம் விடும் பல போலீஸ்காரர்களும் உண்டு.லஞ்சப் பணத்தை விரைவில் பல மடங்காக இந்தக் கும்பல்களுடன் பல போலீஸ் தலைகள் தொடர்பு வைத்துள்ளன.

இக் கும்பலில் ஒருவனான அன்புச் செழியனுக்கு மதுரையில் பல கோடி சொத்துக்கள் உண்டு. மிகச் சாதாரணமாக சுற்றித் திரிந்தஇவன் வட்டித் தொழில் மூலம் கோடிக்கணக்கில் பணம் குவித்துள்ளான். ஆனால், வருமான வரி ஏதும் கட்டியதே இல்லை.

இவனது சொத்துக் குவிப்பு குறித்து அறிந்த வருமான வரித்துறை இவனிடம் விசாரிக்க ஆரம்பித்தது. மதுரை பீபீகுளத்தில் உள்ளவருமான வரித்துறையின் தலைமை அலுவலகம் இவனது சொத்துக்கள் குறித்து விசாரித்தது. இந்தப் பணி துணை கமிஷ்னர்ஜெகந்நாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் இவனது வீடுகளில் சமீபத்தில் ரெய்ட் நடத்தி ரூ. 15 லட்சம் கருப்புப் பணத்தை கைப்பற்றினார்.

இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் ஜெகந்நாதன் மினி பஸ்சில் தனது வீட்டுக்குச் சென்றார். முடக்கத்தான் பஸ் ஸ்டாப்பில்இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து சென்றபோது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியது.

இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மிக மோசமான வார்த்தைகளால் அர்சித்த அந்தக் கும்பல் கத்தியையும் காட்டிமிரட்டியது. பலத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்த ஜெகந்நாதன் இது குறித்து போலீசில் புகார் கூற மறுத்துவிட்டார்.

போலீசாருக்கும் வட்டிக் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு மதுரையில் எல்லோருக்கும் தெரியும் என்பதால் அவர்போலீசில் புகார் தர மறுத்துவிட்டார்.

பணியைச் செய்த அதிகாரியைத் தாக்கப்பட்ட விவரம் தெரியவந்தவுடன் மதுரை வருமான வரி அலுவலக ஊழியர்கள்போராட்டத்தில் இறங்கினர். நேற்று ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டமும் நடத்தினர். இன்று இப் போராட்டம் நடந்தது. இதையடுத்து புகார் தந்தால் தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிமொழி தந்துள்ளனர்.

போலீசார் நடவடிக்கை எடுக்கத் தவறினால் வருமான வரித்துறை ஊழியர்களின் போராட்டம் மாநில அளவில் பரவும் எனஎச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X