For Daily Alerts
Just In
கொழும்பில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 பேர் பலியாயினர். மேலும் 17 பேரின் நிலைமை மிக மோசமாகஉள்ளது.
கொழும்பில் உள்ள பெட்டா ஏரியா எனப்படும் வணிக வளாகத்தின் 4 மாடிக் கட்டடத்தில் நேற்றிரவு இந்த திடீர் தீ பிடித்தது. இந்தக்கட்டடத்தில் உள்ள பல கடைகளிலும் வெடிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
தீ பிடித்தவுடன் இந்த வெடிகள் வெடித்துச் சிதற ஆரம்பித்தன. இதையடுத்து அந்தக் கட்டடம் முழுவதும் தீ பரவியது. இதில் 10 பேர் உடல்கருகி இறந்தனர். மேலும் 17 பலத்த காயமடைந்தனர். இதில் பலரது நிலைமை மிக மோசமாக உள்ளதாகத் தெரிகிறது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.


