செல்வராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: கோவையில் பலத்த பாதுகாப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் நகரைக் கதி கலக்கிய காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.இதையடுத்து கோயம்புத்தூர் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு கோவை உக்கடம் காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக இருந்து வந்தசெல்வராஜ் என்ற காவலரை, அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த சிலர் நடுச் சாலையில் வெட்டிப் படுகொலைசெய்தனர்.
இதையடுத்து கோயம்புத்தூரில் பயங்கர வன்முறை வெடித்தது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்நகரில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. அதில்50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
காவலர் செல்வராஜ் கொலை வழக்கு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷாகுல் அமீதுஎன்பவர் இறந்து விட்டார். மற்ற 8 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். நீதிபதி பிரேம்குமார்தீர்ப்பை வழங்குகிறார்.
தீர்ப்பையொட்டி நகரில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஆணையர் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார்.
-->


