பட்டப் பகலில், நடு ரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம் பெண்
சேலம்:
சேலம் அருகே உடையார்பாளையம் என்ற இடத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற ஒரு இளம் பெண் காரில் வந்தகும்பலால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
நடு ரோட்டில், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகலில் இந்த இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் இவர் அருகே வந்துநின்றது. அதிலிருந்து இறங்கிய கும்பல் அந்தப் பெண்ணைப் பிடித்தது.
அவரைத் தப்ப விடாமல் பிடித்துக் கொண்ட அந்தக் கும்பல் அவர் மீது பெட்ரோலை ஊற்றியது. தனக்கு ஏதோவிபரீதம் நடக்கப் போவதை உணர்ந்த அந்தப் பெண் மரண பயத்தில் கதறினார்.
ஆனால், பட்டாக் கத்திகள் பளபளக்க கொலை வெறியுடன் நின்றிருந்த அந்தக் கும்பலைப் பார்த்தவுடன் அப்பகுதியில் சென்ற மக்கள் அலறிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கடைகளின் ஷட்டர்களும் வேகமாக மூடிக்கொண்டன.
சில நிமிடங்களில் அந்தப் பெண்ணை பெட்ரோலில் ஊற வைத்த அக் கும்பல் தீயைப் பொறுத்தி அவர் மீதுவீசியது. இதில் நடு ரோட்டில் அந்தர் பெண் பெருத்த ஓலம் எழுப்பியபடி எரிந்தார்.
அவரைக் காப்பாற்ற யாரும் வந்துவிடாமல் இருக்க சிறிது நேரம் பட்டாக் கத்திகளுடன் அங்கேயே நின்றிருந்தஅக் கும்பல் அப் பெண் கருகி உடல் பாகங்கள் தரையில் விழ ஆரம்பித்த பின்னர் காரை கிளப்பிக் கொண்டுபறந்தது.
இதையடுத்து சிலர் ஓடி வந்தபோது தரையில் கரிக் கட்டையாய் கிடந்தார் அந்தப் பெண். போலீசார் வந்து அந்தஎரிந்த உடலை கைப்பற்றினர்.
அந்தப் பெண் யார்? அவரை ஏன் இந்தக் கும்பல் கொன்றது? அதுவும் நடுரோட்டில் வைத்து ஏன் எரித்தது?என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
காரில் வந்த கும்பலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. முதலில் அந்தப்பெண்ணை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-->


