For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாநிதி-வாசன் திடீர் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே. வாசன் திடீரென்று சந்தித்துப்பேசினார்.
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற வாசன் அவரிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
பா.ஜ.கவுடனான திமுகவின் நட்பு கூட படிப்படியாக விரிசலாகிக் கொண்டே வரும் நிலையில் இவர்கள் இருவரும்சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில் துறை அமைச்சரும் கருணாநிதியின்மருமகனுமான முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகத்தான் வாசன் வந்ததாக அறிவாலயவட்டாரங்கள் தெரிவித்தன.
-->


