For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடும் ரயிலில் ரெய்ட்: ரூ, 52 லட்சம் ஊழல் பணம் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

ஓடும் ரயிலில் தென்னக ரயில்வே அதிகாரியிடம் இருந்து ரூ. 52 லட்சம் பணத்தை சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தென்னக ரயில்வேயின் மிக உயர்ந்த அதிகாரி அவர். ரயில்வே கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரும் மண்டல பொறியாளர்பதவியில் இருப்பவர். டெண்டர்கள் விடுவது, காண்ட்ராக்ட் ஒதுக்குவதில் பல கோடிகளை லஞ்சமாகப் பெற்றுள்ளார்.

ஏகப்பட்ட சொத்து சேர்த்துவிட்ட இவர் மீது சில காலமாகவே வருமான வரித் துறை கண் வைத்திருந்தது. இவரைக் கையும்களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகளுடன் பேசி இவரை மடக்க முடிவு செய்யப்பட்டது.

இங்கு சம்பாதிக்கும் பணத்தை தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் உள்ள சவல்மதோபூரில் சொத்துக்களாக வாங்கிக் குவித்துவந்தார்.

இந் நிலையில் சமீபத்தில் ஒரு முக்கிய ரயில்வே காண்ட்ராக்டரிடம் இருந்து ரூ. 52 லஞ்சத்தைப் பெற்ற இந்த அதிகாரி அதை தனதுசொந்த ஊருக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.

தனது மனைவி மற்றும் பியூனுடன் அவர் பெங்களூர்- ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். இத் தகவல்சி.பி.ஐக்குத் தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழு வழியில் இன்னொருஸ்டேசனில் ரயிலில் ஏறியது.

ஓடிக் கொண்டிருந்த அந்த ரயிலிலேயே அந்த அதிகாரியிடம் ரெய்ட் நடந்தது. அவரது பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில்ரூ. 52 லட்சம் இருந்தது. எல்லாம் 500 ரூபாய் கட்டுகள்.

இதில் ரூ. 4 லட்ச ரூபாய் தன்னுடையது என்றும் அதை நான் கோபி மஞ்சூரி விற்று சம்பாதித்தது என்று அந்த அதிகாரியின்பியூன் கூறினான். தனது எஜமானைக் காப்பாற்றுவதற்காக அவன் பொய் சொன்னான்.

அதே போல அதிகாரியின் மனைவியும் பொய் சொன்னார். இதில் உள்ள ரூ. 15 லட்சம் பணம் எனது தந்தை 10 ஆண்டுகளுக்குமுன் எனக்குக் கொடுத்தது. இப்போது என் அப்பா இறந்துவிட்டார் என்றார்.

ஆனால், சி.பி.ஐ. மற்றும் வரும்ன வரித்துறை அதிகாரிளின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குப் பின்னர் இது லஞ்சப் பணம் தான்என்பதை அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார்.

இந்தியன் ரயில்வே என்ஜினியரிங் சர்வீசைச் சேர்ந்த இந்த அதிகாரி 1988ம் பேட்ச்சைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே மூத்தபதவிக்கு வந்து ஊழல் மூலம் கோடிக்கணக்கில் சொத்து குவித்து வந்துள்ளார்.

பிடிபட்ட பணம் தவிர அந்த அதிகாரியின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ. 10 லட்சம் பணம் இருந்து. இந்த விவகாரத்தில் முழுவிசாரணை நடந்து வருகிறது.

இவரைப் போன்ற அதிகாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டு காண்ட்ராக்ட்கள் தருவது தான் தரக் குறைவான பாலங்கள்,தண்டவாளங்கள் அமையக் காரணமாகின்றன. அவை தான் விபத்துக்களை உருவாக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி வருகின்றன.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X