அணைக்கட்டு: ஜெ. கடிதத்திற்கு விரைவில் பதில்- ஆண்டனி
திருவனந்தபுரம்:
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதம் குறித்துஆராய்ந்து முடிவெடுப்போம் என கேரள முதல்வர் அந்தோணி கூறினார்.
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழக மக்களும், விவசாயிகளும் கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அந்தோணிக்குக் கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா, அணை கட்டும் முயற்சியைகேரள அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம்அந்தோணி பேசுகையில்,
பேக்ஸ் மூலம் ஜெயலலிதா அனுப்பிய கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. அதை நான் இன்னும் முழுமையாகப்படிக்கவில்லை.
இருந்தாலும் ஜெயலலிதாவின் கடிதத்தைப் பரிசீலனை செய்வோம். பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம்.
எங்கள் மாநில மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நல்லதொரு முடிவை விரைவில் அறிவிப்போம் என்றார்அந்தோணி.
-->


