இன்று பா.ம.க. செயற்குழு, பொதுக் குழு கூடுகின்றன
சென்னை:
பா.ம.கவின் மாநில செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் இன்று திண்டிவனத்தில் நடக்கவுள்ளன.
இது தொடர்பாக பா.ம.க. தலைவரான ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திண்டிவனம்-தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மாங்கனி அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு கட்சியின் எம்.பிக்கள்மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து 7 மணிக்கு மாநில செயற் குழுக் கூட்டமும், 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளன.
இந்தக் கூட்டங்களுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிப்பார். நான் தலைமை வகிக்கிறேன்.
செயற் குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். கட்சி வளர்ச்சிப் பணிகள், உட்கட்சித் தேர்தல் மற்றும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து அப்போதுவிவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டங்கள் முடிந்ததும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என்றுஅவ்வறிக்கையில் மணி கூறியுள்ளார்.
-->


