வைகோ கைதை எதிர்த்து கையெழுத்து போட்டார் இல. கணேசன்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சி நடத்திவரும் கையெழுத்து இயக்கப் படிவத்தில் பா.ஜ.கவின் தேசியப் பொதுச் செயலாளரான இல. கணேசன் இன்றுகையெழுத்திட்டார்.
வைகோ கைதை எதிர்த்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்க மதிமுக முடிவு செய்து அதற்கான இயக்கத்தைநடத்தி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி கையெழுத்துப் போட்டு தொடங்கி வைத்த இந்த இயக்கத்திற்கான படிவத்தில், திமுகஇளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தக் கையெழுத்துப் படிவத்தில் பா.ஜ.கவினர் கையெழுத்திட மறுப்பதாக நேற்று செய்திகள்வெளியாகின. ஆனால் இக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரான எச். ராஜா இந்தச் செய்திகளை மறுத்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள இல. கணேசனின் வீட்டிற்கு மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் இன்றுசென்று, வைகோ கைதை எதிர்க்கும் படிவத்தில் கையெழுத்துப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
இல. கணேசனும் அந்தப் படிவத்தில் உடனடியாகக் கையெழுத்து போட்டார். பின்னர் அவர் நிருர்பகளிடம்பேசுகையில்,
அதிமுகவுடன் கூட்டணி சேருவதற்காக பா.ஜ.க. ரகசியத் திட்டம் தீட்டி வருவதாக கருணாநிதி தேவையற்றகுற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
பா.ஜ.கவை விட்டு திமுக பகிரங்கமாக விலகப் போவதற்காகத்தான் கருணாநிதி இவ்வாறு கூறியுள்ளாரோ என்றசந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டத்தின்படி திமுக இந்தக் கூட்டணியிலேயே தொடர்ந்துநீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் தமிழகத்தில் நாங்கள் தற்போது யாருடனும் கூட்டணி வைத்திருக்கவில்லை. எந்தவிதமான கூட்டணியும்இல்லாமல் இருப்பதால் முழு சுதந்திரத்துடன் நாங்கள் உள்ளோம்.
வரும் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்இல. கணேசன்.
"கருணாநிதி சர்டிபிகேட் தேவையில்லை":
இதற்கிடையே பா.ஜ.கவுக்கு எந்தவிதமான நன்னடத்தை சான்றிதழையும் கருணாநிதி தரவேண்டியஅவசியமில்லை என்று கோயம்புத்தூர் பா.ஜ.க. எம்.பியான ராதாகிருஷ்ணன் கூறினார்.
இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மக்கள் ஆதரிக்கும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை பா.ஜ.கவும் ஆதரிப்பதால் மட்டுமே நாங்கள்அதிமுகவுடன் உறவு வைத்துள்ளோம் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை.
அப்படியே அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பினாலும் பா.ஜ.க. தைரியமாகவும், வெளிப்படையாகவுமேசென்று சேரும். இதற்காக ரகசியத் திட்டங்கள் எல்லாம் தீட்ட வேண்டிய அவசியம் பா.ஜ.கவுக்கு இல்லை.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சில கட்சிகள் தாமாகவேதான் வெளியேறியுள்ளன.கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டுமென்று யாரையும் பா.ஜ.க. வற்புறுத்தவில்லை.
இன்னும் சில கட்சிகள் வெளியேறிய வேகத்திலேயே மீண்டும் கூட்டணிக்கு வந்துள்ளன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானிஉள்ளிட்டவர்களை பொடா சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.
-->


