For Daily Alerts
Just In
பொங்கல் கூட்ட நெரிசல்: சென்னை- நாகர்கோவில் இடையே 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் முன்பதிவு செய்ய கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாலும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிய வந்ததாலும் அதைச்சமாளிக்க சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்பட உள்ளது.
4 நாட்கள் இந்த ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன் பதிவு ஞாயிற்றுக்கிழமை (நாளை) முதல்தொடங்குகிறது. 0611 என்ற எண் கொண்ட இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும்.அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு சென்றடையும்.
10,12,13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும்.
அதே போல நாகர்கோவில் இருந்து ஜனவரி 11, 13,15,18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும்.
-->


