For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகும் செக்ஸ் சாமியார் பிரேமானந்தா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனது ஆசிரமத்தில் தன்னால் வளர்க்கப்பட்ட சிறுமிகளையே கற்பழித்தும், இன்ஜினியர் ஒருவரைக் கொலைசெய்தும் பரபரப்பை ஏற்படுத்திய போலிச் சாமியார் பிரேமானந்தா தனக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

திருச்சியில் பாத்திமாநகரில் ஆசிரமத்தை நடத்தி உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களை குறிப்பாக பக்தைகளைக்கவர்ந்தவர் பிரேம்ஸ். அங்கு பக்தைகளை குளிக்கச் சொல்லி பாத்ரூமில் ரகசிய கேமராக்கள் வைத்து படம் பிடித்துவந்தார்.

தன் ஆசிரமத்தில் பல சிறுமிகளையும் கற்பழித்துள்ளார். ஆசிரமத்தில் நடந்த சில ஆண், பெண் கொலைகளையும்பிரேமானந்தா தான் திட்டமிட்டு நடத்தியதும் உறுதியாகியுள்ளது.

அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் என பல தரப்பினரின் ஆதரவுடன் கொடி கட்டிப் பறந்து வந்தபிரேமானந்தாவின் ஆசிரமத்துக்கு சசிகலா கூட சென்று வந்தது உண்டு.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக சிறையிலேயே இருந்து வரும் பிரேமானந்தாவுக்கு இந்தக் கொலை, கற்பழிப்புவழக்குகளில் சமீபத்தில் தான் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகளிர் அணியினர் எடுத்த முயற்சிகளால் தான் இந்த போலிச் சாமியார் சிக்கினார்.ஆனால், இவரால் கற்பழிக்கப்பட்ட சில ஆசிரப் பெண்கள் மீண்டும் ஆசிரமத்திலேயே அடைக்கலம்அடைந்துவிட்டனர். அவர்கள் பிரேமானந்தா தரப்பினரால் மிரட்டப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந் நிலையில் பிரேமானந்தா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது. தனதுஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பணத்தை இவர் அரசிடம் கணக்கிலேயே காட்டவில்லை.

இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றவியல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் பிரேமானந்தா ஆஜர் செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 14ம் தேதிக்கு நீதிபதி பெருமாள் ஒத்திவைத்தார்.

பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

என் மீது பொய்யான வழக்குப் போடப்பட்டுள்ளது. அனைத்து உண்மைகளையும் கடவுள் மட்டுமே அறிவார்.இலங்கையில் மட்டும் நான் துயரங்களை அனுபவிக்கவில்லை. 1993ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த பிறகும் கூடதுயரங்களையே அனுபவித்து வருகிறேன்.

நான் ஆரம்பித்த அனாதை ஆசிரமத்தில் இன்னும் கூட 250 குழந்தைகள் இருந்து வருகின்றனர். எனக்கு இரட்டைஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யவுள்ளேன் என்றார்.

பின்னர் பிரேமானந்தா மீண்டும் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிறையில் அவர் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைக் காணவெளிநாட்டு பக்தைகள் இன்றும் ஆசிரமத்துக்கும் சிறைக்கும் வருகின்றனர்.

பிற கைதிகளைப் போல் கட்டம் போட்ட உடையை இவர் அணிவது இல்லை. முடியை வளர்க்கவும், காவி உடையில்சுற்றித் திரியவும் சிறையில் இவருக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளை கவனிக்கும் விதத்தில் இவர் கவனிப்பதுதான் காரணம் என்று தெரிகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X