தமிழகத்தில் செல்போன்கள் மீதான வரி அதிரடி குறைப்பு
சென்னை:
தமிழகத்தில் செல்போன்கள் மீதான விற்பனை வரி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அதே போல சினிமா டிக்கெட்கட்டணத்தின் மீதான வரியும் சிறிது குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் செல்போன் ஹேண்ட் செட்கள் மீது இதுவரை 20 சதவீதவிற்பனை வரி விதிக்கப்பட்டு வந்தது. அது 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல உள்நாட்டிலேயே தயாரித்து விற்கப்பட்டு வந்த ஹேண்ட் செட்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.இதையும் 4 சதவீதமாக அரசு குறைத்துள்ளது.
இதன்மூலம் கருப்புச் சந்தையில் விற்பக்கப்படும் கடத்தல் செல்போன்களைக் கட்டுப்படுத்த முடியும் என அரசு கருதுகிறது.
தமிழகத்தில் கடத்தல் ஹேண்ட் செட்களின் விற்பனை 95 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சினிமா டிக்கெட் மீதான விற்பனை வரியையும், நட்சத்திர ஹோட்டல்களின் வரியையும் கூட தமிழக அரசுகுறைத்துள்ளது. இதனால் சினிமா டிக்கெட் விலை சிறிது குறையும்.












Click it and Unblock the Notifications