For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 மணிக்கு உத்தரவு.. 1.30 மணிக்கு பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய டி.ஜி.பியாக ராஜகோபாலனை நியமிக்கும் உத்தரவை முதல்வர் ஜெயலலிதா நேற்று பகல் 1 மணிக்குப் பிறப்பித்தார். உடனேபதவியேற்குமாறு அவருக்கு உத்தரவு வந்ததால், அடுத்த அரை மணி நேரத்தில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்ராஜகோபாலன்.

இதற்கிடையே மனித உரிமைகள் மாநாட்டை முடித்துக் கொண்டு தனது அலுவலகத்துக்குத் திரும்பிய அப்போதையே டி.ஜி.பி.நெயில்வாலுக்கு பெரும் அதிர்ச்சி. அங்கு அவருக்கு முன்பே ராஜகோபலன் வந்து காத்திருந்தார்.

வந்தவர் நேராக ராஜகோபாலனுடன் கைகுலுக்கிவிட்டு உடனே வெளியேறினார். இப்போது நெயில்வாலுக்கு டப்பா பதவியானசீருடைப் பணியாளர் தேர்வாணைய இயக்குனர் பதவி தரப்பட்டுள்ளது. இந்தப் பதவியில் இருந்து தான் ராஜகோபாலன்விமோச்சனம் பெற்று டி.ஜி.பியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெயில்வாலின் மாற்றத்துக்கு காரணம் என்ன என்று அதிகாரிகள் வட்டாரமே குழம்பிக் கொண்டிருந்தாலும் ஒரு காரணம் மட்டும்வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.

தங்களது குறைகளைத் தீர்த்து வைப்பதில் டி.ஜி.பி. நெயில்வால் அலட்சியமாக இருப்பதாக ஆயுதப் படை மற்றும் சிறப்புக் காவல்படைகளின் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களிடம் இருந்து வந்த புகார் தான் அவரது பதவிக்கு உலை வைத்ததாகக்கூறப்படுகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் நேற்று இரவு பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் ஒரு மர்ம பேக்ஸ் வந்தது.

ஆயுதப் படை மற்றும் சிறப்புக் காவல் படையின் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என்ற பெயரில் வந்த அந்த பேக்ஸ்செய்தியில்,

1994ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களான எங்களை அடுத்துவந்த திமுக ஆட்சியில் ஒதுக்கினார்கள். எங்களை ஆயுதப் படையில் போட்டு ஒழித்துக் கட்டினார்கள்.

ஆனால், திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேரடியாக போலீஸ்ஸ்டேசன்களைக் கையாளும் பணி தரப்பட்டது.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒதுக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களை உடனே ஸ்டேசன் பணிக்குமாற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டார்.

ஆனால், அதை டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அமல்படுத்தாமல் இழுத்தடித்தனர். இது குறித்து நாங்கள் முதல்வருக்குபுகார்கள் அனுப்பினோம். இதனால் தான் நெயில்வால் மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த பேக்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆயுதப் படை மற்றும் சிறப்பு காவல் பணியில் இருந்தால் மாமூல் வசூல் ஏதும் கிடையாது. வெறும் சம்பளம் மட்டும் தான்மிஞ்சும். போலீஸ் ஸ்டேசன் பணி என்றால் மாமூல் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ராஜகோபாலன்:

புதிய டி.ஜி.பியாகப் பதவியேற்ற ராஜாகோலன் நேற்று இரவே டெல்லி சென்றார். இன்று காலை தொடங்கிய தேசிய பாதுகாப்புக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

துணைப் பிரதமர் அத்வானி தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் அனைத்து மாநில காவல்துறை தலைவர்களும் தலைமைச்செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இக் கூட்டத்தில் வீரப்பன் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அத்வானியின் நண்பரான ராஜகோபாலன் இன்று அவரைத் தனியாகவும் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

நேற்று பதவியேற்றவுடன் நிருபர்களிடம் பேசிய ராஜகோபாலன், வீரப்பனைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது. தமிழக போலீஸ் எனக்கு புதிதல்ல. 40 ஆண்டுகாலம் இங்கு பணியாற்றியுள்ளேன்.

சொல் ஒன்று செயல் ஒன்று என்று இல்லாமல் நேர்மையோடு, கை சுத்தத்தோடு, ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு உழைத்துவரும் அதிகாரி நான்.

தமிழகத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏதும் இல்லை. நக்சல் பிரச்சனையை சமூகப் பிரச்சனையோடு பார்க்க வேண்டும். கந்துவட்டி போன்ற அடாவடியை ஒழித்துவிட்டால் நக்சல்கள் தலைதூக்க முடியாது. அவர்களுக்கு மக்கள் ஆதரவும் கிடைக்காது.

போலீசாரிடம் இருந்து வந்த புகார்கள், குறைகள் அடங்கிய கடிதங்கள் 2 பெட்டிகள் நிறைய கிடக்கின்றன. அவற்றை இருவாரத்தில் படித்து முடித்து குறைகள் தீர்க்கப்படும் என்றார்.

போலீசார் எழுப்பிய புகார்களால் தான் நெயில்வாலின் பதவி போனதாகக் கருதப்படும் நிலையில் அந்த புகார்களைத் தீர்ப்பேன்என்று முதல் பேட்டியிலேயே ராஜகோபாலன் உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர நெயில்வால் மீது இன்னொரு கடுப்பும் இருந்தது. அவர் சன் டிவி, ஸ்டார் டிவி, ஜெயா டிவி என்று வித்தியாசம்பார்க்காமல் தன்னைச் சந்திக்க வரும் நிருபர்களிடம் வெளிப்படையாகப் பேசி வந்தார். சமீபத்தில் சன் டிவியின் கிரைம் பீட்நிருபரிடம் பேசிக் கொண்டிருந்தவர் சாதாரணமாக, தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது உண்மை தான்என்றரீதியில் பேச அதை சன் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியது.

காவல்துறையின் தலைவரே மாநிலத்தில் தீவிரவாதம் வளர்ந்துவிட்டதாக எதிர்க் கட்சியின் சேனலிடம் கூறுவதா என்று அவர் மீதுதலைவியிடம் அதிமுகவினர் புகார்களைக் குவித்தனர். இதனால் நெயில்வால் மீது கடுப்பில் தான் இருந்து வந்தாராம் மேடம்.

மேலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாய் நின்றார் நெயில்வால் என்கிறார்கள். ஆளும் கட்சி என்று கூறிக்கொண்டு சிபாரிக்கு வந்தவர்களை நெயில்வால் சூடாக திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடந்ததுண்டு. எல்லாம் சேர்த்துஅவரது பதவியை காவு வாங்கிவிட்டது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X