For Daily Alerts
Just In
சுரங்கப் பாதையில் விழுந்த லாரியின் கண்டெய்னர்
சென்னை:
சென்னை ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப் பாலத்தில், ஆப்பிள்களை ஏற்றிச் சென்ற லாரியின் கண்டெய்னர்கவிழ்ந்து விழுந்தது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்திலிருந்து ஒரு லாரி ஆப்பிள்களை ஏற்றுக் கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டிற்குச்சென்றது.
இன்று அதிகாலை 4 மணியளவில் பாரினை பகுதியில், ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப் பாதை பாலத்தில்வேகமாக திரும்பியபோது, லாரியில் இருந்த கண்டெய்னர் நழுவி சுரங்கப் பாதையில் விழுந்தது.
இதனால் பாலத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிடந்ததால்உயிர்சசேதம் எதுவும் இல்லை.
சுரங்கப் பாதையில் விழுந்த கண்டெய்னரை எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதனால் அந்தப் பாதையில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-->


