சேலம்: கார், லாரியுடன் எரிசாராய லாரி மோதல்- தீயில் சிக்கி 2 டிரைவர்கள் பலி
சேலம்:
சேலம் அருகே எரிசாராயம் ஏற்றி வந்த லாரியுடன் எதிரே வந்த மற்றொரு லாரியும் காரும் மோதியதில்பயங்கரமாகத் தீப்பற்றிக் கொண்டது. இவ்விபத்தில் காரின் டிரைவரும் ஒரு லாரியின் டிரைவரும் உடல் கருகிஉயிரிழந்தனர்.
தூத்துக்குடியிலிருந்து எரிசாராயம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
சேலம்-மள்ளூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் காருடன் இந்த எரிசாராயலாரி பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்திலேயே எரிசாராய லாரி தீப்பிடித்துக் கொண்டது. இந்தத் தீ உடனடியாக இரண்டாவது லாரிக்கும்காருக்கும் வேகமாகப் பரவியது.
மூன்று வாகனங்களும் சில நிமிடங்களிலேயே பயங்கரமாகத் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.
இதில் இரண்டாவது லாரியின் டிரைவரும் காரின் டிரைவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
எரிசாராய லாரியின் டிரைவரும், கிளீனரும், மற்றொரு நபரும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


