For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க விமான விபத்தில் 2 இந்தியர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்:

துருக்கியிலும் அமெரிக்காவிலும் நடந்த இரு வேறு விமான விபத்துகளில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க விமானவிபத்தில் பலியானவர்களில் 2 பேர் இந்திய மாணவர்களாவர்.

துருக்கியில் நடந்த பயங்கர விமான விபத்தில் 75 பேர் பலியாயினர். 5 பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர்.

துருக்கி ஏர்லைன்சுக்குச் சொந்தமான இந்த பயணிகள் விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது. கடும்பனிமூட்டத்துக்கு மத்தியில் வந்திறங்கிய அந்த விமானம் ரன்-வேக்கு முன்னதாகவே தரையில் மோதிவிட்டது.

ரன்வே என நினைத்து தரையில் விமானத்தை இறக்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரன்வே ஆரம்பிப்பதற்கு 30மீட்டருக்கு முன்னதாகவே அந்த விமானம் தரை இறங்கிவிட்டது. தரையில் மோதிய வேகத்தில் அந்த விமானம் இரண்டாகவெடித்துச் சிதறியது.

இஸ்தான்புல் நகரில் இனறு அதிகாலை புறப்பட்ட அந்த விமானம் தியார்பகிர் என்ற இடத்தில் உள்ள ராணுவ விமான தளத்தில்தரையிறங்கியபோது இந்த விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவில் விமான விபத்து:

அதே போல காலை (இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு) அமெரிக்காவின் வடக்கு கரோலினா அருகே டக்ளஸ் விமானநிலையத்தில் நடந்த விமான விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 21 பேர் பலியாகினர்.

சார்லோட்/ டக்ளஸ் விமான நிலையத்தில் இருந்து கிரீன்வில்லி நோக்கிப் புறப்பட்ட அந்த மிட்வஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம்(எண்- 5481) விமான ஓடுபாதையில் இருந்து வானில் ஏறிய சில நொடிகளில் தரையில் மோதியது.

விமான என்ஜின்களில் போதிய திறன் கிடைக்காததால் தான் அந்த விமானம் பறக்க இயலாமல் தரையில் விழுந்ததாகக்கூறப்படுகிறது. தரையில் இருந்து எழும்பியுடன் மிக வேகமாக தரையை நோக்கி இறங்கிய அந்த விமானம், விமானநிலையத்துக்குள் இருந்த கட்டடத்தில் மோதி வெடித்தது.

இதில் அந்த விமானத்தில் இருந்த 21 பேரும் உயிரிழந்தனர்.

இந்தப் பயணிகளில் இருவர் இந்தியர்களாவர். ஒருவரது பெயர் கணேஷ்ராம் சீனிவாசன் (வயது 23), இன்னொருவர் பெயர்சீனிவாச ரெட்டி பாதம் (வயது 24). இவர்கள் இருவருமே கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவந்தவர்கள். 2001ம் ஆண்டு முதல் இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

Sᶵz -70; Ea }vࠓ B

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X