10 லட்சம் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி-சேலை: ஜெ. அறிவிப்பு
சென்னை:
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி மற்றும் சேலைகளை வழங்கதமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் கடுமையாகப்பாதிக்கப்பட்டனர்.
கைத்தறி வேஷ்டி, சேலைகளைக் கொள்முதல் செய்வதற்குக் கூட அரசு மறுத்து விட்டதால் கூட்டுறவு சங்கங்களில்அவை தேங்க ஆரம்பித்தன. இதனால் வேலை கிடைக்காமல் கூலி நெசவாளர்கள் வாடத் தொடங்கினர்.
பசி, பட்டினியால் வாடிய நெசவாளர்களுக்கு உதவும் பொருட்டு பல இடங்களிலும் கஞ்சித் தொட்டிகளைத்திறந்தது திமுக. இதற்குப் போட்டியாக அதிமுக முட்டை பிரியாணி வழங்கவே, இந்த விவகாரம் அரசியலாகிநெசவாளர்கள் மேலும் நொந்து போயினர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, ரேஷன் கடைகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களின் மூலம் மலிவுவிலையில் வேஷ்டிகள் மற்றும் சேலைகளை விற்க அரசு ஏற்பாடு செய்தது.
நெசவாளர்களுக்கு உதவும் பொருட்டு ஏராளமான மக்கள் வேஷ்டிகள், சேலைகளை வாங்கிச் சென்றனர். பலகல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் அவற்றை வாங்கியதோடு நில்லாமல் அவற்றை உடுத்திக் கொண்டுகல்லூரிக்கு வந்து அசத்தினர்.
சமீபத்தில் சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் 6,000 அரசு ஊழியர்கள் கூட மலிவு விலைவேஷ்டிகள், சேலைகளை வாங்கி உடுத்திக் கொண்டு வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில்தான் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி 10 லட்சம் முதியோர், உடல் ஊனமுற்றோர் மற்றும்ஏழைகளுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.10 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.200 ஓய்வூதியம் வாங்கும் முதியோர், விதவைகள், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்ஆகியோர் இந்த இலவச வேஷ்டிகள் மற்றும் சேலைகளைப் பெறுவர்.
நேற்று முதல் வேஷ்டி-சேலை வழங்கும் பணி தொடங்கி விட்டது. அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகாஅலுவலகங்கள் மூலம் இலவச வேஷ்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தங்களுக்குரிய அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் மற்றும் ஓய்வூதியம் பெறும் கார்டுகள் ஆகியவற்றைக்காட்டி இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் மூலம் இலவச வேஷ்டி, சேலை பெறுவார்கள்.
-->


