தற்கொலை எதிரொலி: விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு- ஜெ. அறிவிப்பு
சென்னை:
வரும் பொங்கல் முதல் தமிழகத்தில் உள்ள ஏழை விவசாயிகள் அனைவருக்கும் தினமும் இலவசமாக மதிய உணவுவழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி தாண்டவமாடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்மாவட்டங்களில் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டுள்ளன.
காவிரியில் தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடாததால் இந்த காவிரி டெல்டாபகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன.
இதன் விளைவாக, வறுமையைச் சமாளிக்க முடியாமல் சமீபத்தில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். தமிழக அரசின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.
அதே போல சென்னை உயர் நீதிமன்றமும் இது மக்கள் நல அரசு தானா?, பட்டினிச் சாவைத் தடுக்க இந்த அரசுஎன்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேள்வி கேட்டு துளைத்தெடுத்தது.
இதையடுத்து தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மதிய உணவைஇலவசமாக அளிக்க முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் இதுகுறித்து நிருபர்களிடம்ஜெயலலிதா கூறுகையில்,
தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதால்லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் துயரைப் போக்க, வரும் பொங்கல் தினம் (ஜனவரி 15) முதல் தினமும் அவர்களுக்கு இலவசமாகமதிய உணவு வழங்க ஆணையிட்டுள்ளேன்.
இந்தத்திட்டம் அமலுக்கு வரும். சென்னை தவிர தமிழகத்தின் 28 மாவட்டங்களிலும் இத்திட்டம்அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சிறு, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களதுகுடும்பத்தினருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்படும்.
வரும் 13ம் தேதிக்குள் தங்கள் குடும்பத்தினரின் பெயர்களை டவுண் பஞ்சாயத்து அலுவலகங்களில் பதிவு செய்துகொண்டு இதற்கான கூப்பன்களைப் பெற்றுக் கொள்ளுமாறு விவசாயிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் முதல் நாளான பொங்கல் தினத்தன்று மதிய உணவுடன் விவசாயிகளுக்குபொங்கலும் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கும்இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் துயரைத் துடைப்பதற்காகவே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதற்காகஆகும் செலவு குறித்து அரசு கவலைப்படவில்லை.
தேவைப்படும் நாள் வரை இந்தத் திட்டம் நீடிக்கும். இதுதவிர விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு ஆகியவையும் அரசின் திட்டத்தில் உள்ளன.
வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்என்றார் ஜெயலலிதா.
இந்தத் திட்டத்திற்கான போதுமான நிதி அரசிடம் உள்ளது. இந்தத் திட்டத்தால் நிதி நெருக்கடி ஏற்படவாய்ப்பில்லை என்று மாநில நிதித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-->


