மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு: தே.ஜ. கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது திமுக?
சென்னை:
மத்திய அரசின் தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், பொருளாதாரக் கொள்கைகள் போன்ற திட்டங்களைக்கடுமையாக எதிர்க்கப் போவதாக திமுக இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் அது தேசிய ஜனநாயகக்கூட்டணியை விட்டு வெளியேறும் என்று தெரிகிறது.
தே.ஜ. கூட்டணியில் உள்ள பா.ஜ.கவுடனான உறவை தமிழகத்தில் கடந்த ஆண்டே திமுக முறித்துக் கொண்டது.மத்தியில் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம், ஆனால் தமிழகத்தில் வெறும் நட்பு மட்டுமே என்று இருகட்சிகளும் கூறின.
தமிழக கோவில்களில் இலவச அன்னதானத் திட்டத்தை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாசெயல்படுத்தத் தொடங்கியதிலிருந்தே அவருடைய அதிமுகவுடன் பா.ஜ.க. நெருக்கத்தைப் புதுப்பித்துக்கொண்டது.
திமுகவின் பலத்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டு கொள்ளாத பா.ஜ.க., தொடர்ந்து அதிமுகவை நேரடியாகவும்மறைமுகமாகவும் ஆதரித்து வந்தது.
சமீபத்தில் தமிழக அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் பின்னர் அதிமுகவும்பா.ஜ.கவும் முன்பை விட வெகு வேகமாக நெருங்க ஆரம்பித்தன.
இந்துத்துவா மற்றும் இந்து மதக் கொள்கைகளை திமுக தலைவர் கருணாநிதி விமர்சிக்கவே, பா.ஜ.கவின் தேசியப்பொதுச் செயலாளரான இல. கணேசன் அவற்றை மறுக்க ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே அறிக்கைப் போர்வலுத்து வந்தது.
இதற்கிடையே திமுகவைத் தங்கள் கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. "தே.ஜ.கூட்டணியிலிருந்து திமுக முதலில் வெளியேறட்டும். அதன் பின்னர் கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம்" என்றுதமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் வெளிப்படையாகவே பேட்டியளித்தார்.
ஆனாலும் மத்திய அமைச்சர் பதவிகள் பறிபோய் விடுமே என்பதால் மனக் கசப்புகளையெல்லாம் சகித்துக்கொண்டு தே.ஜ. கூட்டணியிலிருந்து திமுக விலகாமலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் பல திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கப் போவதாக இன்று திமுக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தின்போது, மத்திய அரசின் தனியார்மயமாக்கல்,உலகமயமாக்கல், பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட திட்டங்களை எதிர்க்கப் போவதாக அக்கட்சி தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.
இந்தியத் தொழில்துறையைக் காக்க வேண்டுமானால் மத்திய அரசு தன்னுடைய புதிய பொருளாதாரக்கொள்கைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்தவர்களில்ஒருவர் மத்திய தொழில்துறை அமைச்சரான திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறன் என்பதுதான். அவர் தற்போதுஅமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
திமுகவின் இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தே.ஜ. கூட்டணியிலிருந்து வெகு விரைவில் அக்கட்சிவெறியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக வெளியேறுவதால் தே.ஜ. கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று பா.ஜ.கவும் கருதுகிறது.ஏனென்றால் திமுக வெளியேறிவிட்டால் கூட்டணிக்குள் எந்த நேரத்திலும் நுழைவதற்குத்தான் அதிமுக காத்துக்கொண்டிருக்கிறதே.
-->


