For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் உள்ள அகதிகளை திரும்ப அழைப்பது குறித்து புலிகள்- இலங்கை பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் தமிழ் மக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

கிளிநொச்சியில் இன்று இந்த ஆலோசனைகள் நடந்தன. கடந்த 1983ம் ஆண்டில் இனக் கலவரம் வெடித்தபோது சுமார் 7 லட்சம்தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர். அந்தக் கலவரத்தில் சுமார் 2,000 அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கம் இல்லாமல்கொல்லப்பட்டனர்.

நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களில் சுமார் 6 லட்சம் பேர் ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியநாடுகளில் குடியேறினர். சுமார் 1 லட்சம் பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

இதில் சுமார் 60,000 பேர் தமிழகத்திலும் மற்றவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர்.

இப்போது இலங்கையில் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தான் இந்த மக்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை.பேச்சுவார்த்தை நல்ல திசையில் போய்க் கொண்டிருப்பதால் அகதிகளாய் வாழும் தமிழ் மக்களை மீண்டும் இலங்கையில்குடியமர்த்துவது குறித்த திட்டங்கள் சூடு பிடித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் இதில் முதல் முயற்சியை எடுத்துள்ளது. இன்று ஐ.நா. தூதரின் தலைமையில் கிளிநொச்சியில் இதற்காகசிறப்புக் கூட்டம் நடந்தது. இதில் புலிகளின் பிரதிநிதிகளும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மறுவாழ்வுத்துறைஅமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே அரசு குழுவுக்கு தலைமை தாங்கினார்.

மேலும் உள்துறை அமைச்சகம், சுங்கத்துறை, குடியேற்றத்துறை, சட்டத்துறை அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தைகளில்பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜெயவர்த்தனே, தமிழ் மக்கள் தாங்காகவே மீண்டும் இலங்கைக்குக்குடியேறுவதை ஊக்கப்படுத்த உள்ளோம். தமிழகத்தில் உள்ள 111 அகதி முகாம்களில் சுமார் 66,000 பேரும், மற்ற மாநிலங்களில்சுமார் 30,000 பேரும் வசித்து வருகின்றனர்.

இதில் சுமார் 16,000 பேர் முழுக்க முழுக்க புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்தவர்கள். இதனால் புலிகளுடன் பேசித்தான் இவர்களைக் குடியேற்ற முடியும் என்றார்.

இவர் சில மாதங்களுக்கு முன் தமிழகத்துக்கு வந்து அகதி முகாம்களில் உள்ள தமிழர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார் என்பதுநினைவுகூறத்தக்கது.

இதற்கிடையே தமிழகத்தில் வசித்து வந்த சுமார் 1,000 பேர் ஏற்கனவே இலங்கைக்குத் திரும்பிவிட்டனர்.

நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்கள் தவிர சுமார் 1.8 லட்சம் பேர் உள்நாட்டிலேயே பல்வேறு பகுதிகளில் சிதறி வாழ்ந்துவந்தனர். அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது முதல் இவர்கள் மீண்டும் தங்கள் பகுதிகளுக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

நாடு திரும்பும் மக்களுக்கு முதல் கட்டமாக பிளாஸ்டிக் தார்பாய்கள், சமையல் பாத்திரங்கள், படுக்கைகள், சோப்பு ஆகியஅடிப்படைப் பொருள்களை தரவே 10 மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது.

உதவும் இந்தியா:

இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்கு ராணுவ ஆலோசனை வழங்க இந்தியா முன் வந்துள்ளது. ராஜிவ் காந்தி கொலையைத்தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் தலையிடுவதையே இந்தியா தவிர்த்து வந்தது.

ஆனால், நார்வே உதவியுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியதையடுத்து இலங்கை விவகாரத்தில் இந்தியா மெதுவாகதன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து நார்வே அரசும் இலங்கை அரசும் உடனுக்குடன் இந்தியாவுக்கு தகவலகளைத் தந்துவருகின்றனர். இந்தியாவின் யோசனைகளையும் ஏற்று வருகின்றனர்.

இந் நிலையில் இப்போது புலிகள் பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் முழுமையாக வெளியேறுவதையும், புலிகள்ஆயுதங்களை கீழே போடுவதையும் உறுதி செய்யும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கும் பொறுப்பு இந்தியாவிடம்தரப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் தான் போர் நிறுத்தம் தொடர்பான குழுவில் இருந்து புலிகள் வெளியேறினர். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையேபாதிக்கப்படும் சூழல் உருவானது. அப்போது இந்தியாவின் உதவியை நார்வே நாடியது.

இதையடுத்து வட கிழக்குப் பகுதியில் ராணுவமும் புலிகளும் தங்களது மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகபுதிய திட்டம் வகுக்க நம்பியாரை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.

நம்பியாரின் உதவியை ஏற்க நார்வே, இலங்கை அரசுகள் ஒப்புக் கொண்டுவிட்டன. அதே போல புலிகளும் அவரது செயல்திட்ட அறிக்கையை பார்த்த பின்னர் தனிப்பட்ட ஆலோசகராக அவரை ஏற்கவும் தயாராக இருப்பதாக புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அறிவித்துள்ளார்.

அரசியல் சட்டம் தயாரிக்கவும் உதவி:

அதே போல இனப் பிரச்சனைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசியல் அதிகாரம் வழங்கும் அரசியல்சட்டத்தைத் தயாரிக்கவும் இந்தியாவின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது.

இந்திய அரசியல் சட்ட வல்லுனர்கள் உதவியுடன் இது தயாரிக்கப்படும். பெரும் கடன் தொல்லையில் சிக்கியுள்ள இலங்கையைமீட்க அவசர நிதி உதவியையும் இந்தியா தந்துள்ளதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் வெளியில் தெரியாமல் பலஉதவிகளை இந்தியா செய்து வருவதாகவும் அமைச்சர் பெரிஸ் தெரிவித்தார்.

ஜப்பானும்...

இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் எக் காரணத்தை முன்னிட்டும் தோல்வி அடைந்துவிடாமல் தடுக்க ஜப்பான் சிறப்புத்தூதரை நியமித்துள்ளது. இவர் இரு தரப்பினருடன் அவ்வப்போது பேச்சு நடத்துவார். தமிழர் பகுதிகளை சீரமைக்க பெரும் நிதிஉதவி செய்யவும் ஜப்பான் முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா- இலங்கை ராணுவம் கூட்டு பயிற்சி:

இதற்கிடையே அமெரிக்க ராணுவத்தினரும் இலங்கை ராணுவமும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

பேலன்ஸ் ஸ்டைல் என்ற பெயரில் நடக்கும் இது 9வது கூட்டுப் பயிற்சியாகும். மாக்ச் மாதம் வரை இப் பயிற்சி நடக்கும் என்றுதெரிகிறது.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது தமிழர் பகுதிகளில் அநியாயமாக குண்டு வீசி வந்ததால் இலங்கை ராணுவத்துக்குஹெலிகாப்டர் ஸ்பேர் பார்ட்ஸ் வழங்கக் கூட அமெரிக்கா மறுத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அமைதி திரும்பி வருவதால்கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X