சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கூடாது: கலாமுக்கு 1,200 மாணவர்கள் கடிதம்
சேலம்:
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கக் கூடாது என்று கோரி ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமுக்கு அந்நகரைச் சேர்ந்த ஒரு பள்ளியின் 1,200 மாணவ, மாணவிகள் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்படுவதற்குப் பல்வேறு தரப்புகளிலும் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சேலத்தில் உள்ள வித்யா மந்திர் என்ற பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இதற்கு எதிர்ப்புதெரிவித்து டாக்டர் கலாமுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சுமார் 1,200 மாணவ, மாணவிகள் தாங்கள் எழுதிய கடிதங்களைப் போட்டி போட்டுக் கொண்டு போய் தபால்பெட்டிகளில் ஒருவர் பின் ஒருவராகப் போட்டனர்.
சேலம் உருக்காலை தனியார்மயமாக்கப்பட்டால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால், மத்தியஅரசின் இந்த முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று தங்கள் கடிதத்தில் டாக்டர் கலாமை கோரியுள்ளதாக மாணவ,மாணவிகள் தெரிவித்தனர்.
-->


