சேலம் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் பலி
சேலம்:
சேலம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் காரில் பயணம்செய்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திராவிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு லாரி டயரில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம்சீலையம்பட்டி அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது ஆந்திராவிலிருந்து வந்த ஒரு கார் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் படு வேகத்துடன்மோதியது.
இதில் காரின் முன் பகுதி முழுவதும் லாரிக்குள் புகுந்தது. இந்த கோரமான விபத்தில் காரில் பயணம் செய்த மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காரிலிருந்த மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். உயிரிழந்த நான்கு பேருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


