திருப்பத்தூர்: தீயில் சிக்கி தாய், 3 குழந்தைகள் உடல் கருகி பலி
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவருடைய 3 குழந்தைகளும் உடல் கருகிஉயிரிழந்தனர்.
திருப்பத்தூரை அடுத்த தண்ணீர்பந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரை. இவருடைய கணவர் ஒருமெக்கானிக் என்பதால் வீட்டில் பெட்ரோல், டீசல் நிரம்பிய கேன்களை வீட்டில் வைத்திருப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை தாமரை சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அடுப்பிலிருந்துபரவிய தீப்பொறி பெட்ரோல், டீசல் கேன்களின் மீது விழுந்து தீப்பிடித்துக் கொண்டது.
இந்தத் தீ மளமளவெனப் பரவி சில நிமிடங்களிலேயே வீடு முழுவதும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
தாமரையும் அவருடைய மூன்று குழந்தைகளும் இந்தத் தீக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதற்குள் தகவல் தெரிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எவ்வளவோ முயன்றும் அந்த நான்குபேரையும் காப்பாற்ற முடியாமல் போனது. தாமரையும் அவருடைய மூன்று குழந்தைகளும் உடல் கருகிபரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


