For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கல்: ஜெ. சபதம், கருணாநிதி கருணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பரவியுள்ள தமிழர்கள் இந்தப் பொங்கல் திருநாளைஆண்டுதோறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் கரும்பு, பனங்கிழங்கு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனைதற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிராமங்களில் மக்கள் தங்கள் வீடுகளின் முன் பானைகளில்பொங்கலைப் பொங்கி இந்தத் திருநாளைக் கொண்டாடுவார்கள். பொங்கல் பொங்குவதற்கு நாளை காலை 6.36மணிக்கு நல்ல நேரம் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

பொங்கலையொட்டி தமிழகத்தின் பல இடங்களிலும் பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் சில இடங்களில் கபாடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

பொங்கலையொட்டி பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி:

திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தைத் திங்கள் முதல் நாள் தமிழர் திருநாளாய், பொங்கல் திருநாளாய்த் தமிழ்ச் சமுதாய மக்களால் மகிழ்ச்சியுடனும்எழுச்சியுடனும் கொண்டாடப்படுகின்றனது.

இந்த இனிய நன்னாளிஸ் என் அருமைத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றும் வளம் செழிக்க, நலம் கொழிக்க,நல்லறம் தழைக்க என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ச்சியடைகிறேன்.

சேர இளவல், செந்தமிழ் வித்தகர் இளங்கோவடிகள் திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மா மழைபோற்றுதும் எனப்பாடி சிலப்பதிகாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இது தமிழ்ச் சமுதாய மக்கள் இயற்கையை நேசித்து வாழ்ந்தவர்கள் என்பதன் சீரிய சான்றாகத் திகழுகிறது.

நிலத்தில் விழுந்த நெற்றி வியர்வை நெல்மணிகளாய் விளைந்திட அது விளைவதற்கு உதவிய கதிரவன்,வான்மழை, எருதுகள் அனைத்திற்கும் நன்றி செலுத்திடும் முகத்தான இனிய பண்பாட்டுத் திருவிழாவாகக்கொண்டாட்பட்டு இந்த ஆண்டும் தமிழகத்தில் உழவர் பெருமக்களால் மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன்கொண்டாடப்பட வேண்டிய ஒன்று!ஆனால், உவகை பொங்க இத் திருநாளைக் கொண்டாடி மகிழ வாய்ப்பில்லை, அறிவோம்!. அதனை நாமேஉணர்வோம். என் செய்வது?

அரசு அமைய ஆதரவு தந்த மக்கள் மனம் மகிழ, மனம் நிறைவு பெற, அவர்தம் வாழ்க்கைத் தரம் உயரநன்றியுணர்வுடன் செயல்படாத ஆட்சியில், உழவர்கள் மட்டுமா? பாட்டாளிகள், நெசவாளர்கள், வணிகர்கள்,அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என எவரால் தான் இத் திருநாளை உளம் பூரிக்கக் கொண்டாடி மகிழ முடிகிறது?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியாம் தமிழ்க்குடி, இழந்துள்ள பெருமையைமீண்டும் பெற்றிட, பூண்டுள்ள வறுமைக் கோலத்தைக் களைந்தெழுந்து மீண்டிட இப்பொங்கல் திருநாளில் புதியசூளுரை மேற்கொள்வோம்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா:

முதல்வர் ஜெயலலிதாவின் பொங்கல் செய்தி:

தமிழர் வாழும் இடமெல்லாம் தனிச் சிறப்புடன் கொண்டாடப்படும் இந்த மங்கலப் பொங்கல் திருநாளில்என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

உழுவார் உலகத்தாருக்கு அச்சாணி என்பது உலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு.அதற்கிணங்க, உலகுக்கு உணவூட்டும் உன்னத உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள்திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடிவருகிறார்கள்.

இந்தப் பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீர வேண்டும் என்று உறுதிஏற்போம். இன்று காவிரியில் நீர் வரத்து இல்லை. கழனிகளில் சாகுபடி இல்லை. எனவே பொங்கலின்உண்மையான மகிழ்ச்சியும் இன்று நம்மிடையே இல்லை.

வறண்டு கிடக்கும் பூமியில் விவசாயம் செய்ய இயலாமல் உழவர்கள் வாடிக் கிடக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.இருந்தாலும் நம் ஊக்கத்தாலும், உள்ளத்தின் உறுதிப்பாட்டாலும் சோதனைகளை வெல்வோம்.

காலம் மாறும், அத்தோடு இந்த வறட்சிக் கோலமும் மாறும். அடுத்த ஆண்டு வரும் பொங்கல் நிச்சயம் மகிழ்ச்சிப்பொங்கலாய் இருக்கும். அது நெஞ்சில் மணக்கும் பொங்கலாய் இனிக்கும் என்ற நம்பிக்கையை உங்களோடுபகிர்ந்து கொள்கிறேன்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது பழமொழி. நாளை பிறக்கும் தை மாதம் மூலம் வளம் பிறக்கட்டும், நலம்சிறக்கட்டும் எனக் கூறி தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்வுடன்தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

வைகோ:

லைகோ வெளியிட்டுள்ள செய்தியில், தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனதுதான் இவ்வளவு நாட்களிலும்நாம் கண்ட தோல்விகளுக்கெல்லாம் காரணம். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான்தமிழகத்தைக் காக்க முடியும். இதைச் சங்ககால வரலாறே நமக்கு நன்றாக உணர்த்தியுள்ளது.

அப்படி ஒரு ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் நாம் இன்று உள்ளோம்.

திராவிட அமைப்புகளுக்கு எதிராகச் செயல்படும் அனைத்து சக்திகளையும் திராவிட அமைப்புகளும் கட்சிகளும்ஒன்று சேர்ந்து கொண்டு அடித்து விரட்டுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

திமுகவுடன் வெகுவேகமாக நெருங்கி, அதே வேளையில் பா.ஜ.கவைவிட்டு விலகி வரும் சூழ்நிலையில்இப்படியொரு பொங்கல் வாழ்த்துச் செய்தியை வைகோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X