For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர வேண்டியது 194 டி.எம்.சி, கேட்பது 18.8, தரப் போவது வெறும் 6 டி.எம்.சி.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் தரவேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் 23 டி.எம்.சியை கர்நாடகம் மிச்சம் வைத்துள்ளது. மொத்தத்தில் 109.62டி.எம்.சியை மிச்சம் வைத்துள்ளது.

இந்த நீரைத் தான் தமிழகம் கோரி வருகிறது. 109.62 டி.எம்.சியில் குறைந்தபட்சம் 18.8 டி.எம்.சி. நீரையாவது கர்நாடகம் தரவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், 6 டி.எம்.சி. மட்டுமே தர முடியும் என கர்நாடகம் கூறியுள்ளது. தினமும் 1,200 கன அடி நீர் வீதம் பிப்ரவரி இறுதி வரைஇந்த 6 டி.எம்.சி. நீரை கர்நாடகம் பிரித்துத் தர உள்ளது.

18.8 டி.எம்.சிக்குக் குறைவாக வரும் நீரால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இருக்காது. 6 டி.எம்.சியில் பூமிஉறிஞ்சியது, வெப்பத்தால் ஆவியானது போக 5 டி.எம்.சிக்கும் குறைவான நீர் தான் மேட்டூருக்கே வரும்.

இங்கிருந்து திறந்துவிடப்படும் நீர் காவிரி டெல்டாவின் கடை மடை பகுதிகளுக்குப் போய்ச் சேரும்போது வெறும் 4 டி.எம்.சிக்குகொஞ்சம் அதிகம் இருக்கும். அவ்வளவு தான்.

இதனால் தமிழகத்துக்கு குறைந்தபட்சம் 18.8 டி.எம்.சி. நீரையாவது தர வேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகம் நீரைத் திறந்துவிடுவதாகக் கூறிய பின்னர் டெல்லியில் இருந்து இரவோடு இரவாக சென்னை திரும்பிய ஜெயலலிதாஉடனே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் மிக மோசமான நிலைமை உள்ளது. இந்தக் கடுமையான நேரத்தில் தான் 6வது காவிரி ஆணையக் கூட்டம் நடக்கஇருந்தது. ஏற்கனவே குறுவையை இழந்துவிட்டு இப்போது சம்பா நெல்லையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் உள்ளவிவசாயிகள் இக் கூட்டத்தைத் தான் நம்பி இருந்தனர்.

நாட்டில் பல மாநிலங்களும் வறட்சி காரணமாக துயரத்தில் மூழ்கியுள்ளதை நாம் ஒப்புக் கொண்டாலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளஇந்த நிலை செயற்கையானது.

காவிரியின் அப்பர் ரிப்பாரியன் (மேல் மடை) மாநிலம் என்ற ஒரே காரணத்துக்காக தனது மாநிலத்தின் வழியே தமிழகத்துக்குவரும் செல்லும் ஆற்று நீரை கர்நாடகம் நிறுத்தி வைத்துள்ளது. இது தமிழக விவசாயிகள் மீது சுமத்தப்பட்டுள்ள செயற்கையானவறட்சியாகும்.

தமிழகத்துக்கு உரிமை உள்ள நீரைக் கூடத் தராமல் அவர்கள் மறுத்து வந்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்ற ஆணைப்படி 10.01.2003 வரை தமிழகத்துக்கு கர்நாடகம் மொத்தம் 194.45 டி.எம்.சி. நீரைத் தந்திருக்கவேண்டும். ஆனால், 84.83 டி.எம்.சி.நீரைத் தான் விட்டுள்ளது. இன்னும் தமிழகத்துக்கு 109.62 டி.எம்.சி. நீர் வர வேண்டியுள்ளது.

10.01.2003ம் தேதி நிலவரப்படி மேட்டூரில் வெறும் 6.7 டி.எம்.சி. தான் உள்ளது. இதில் 5 டி.எம்.சி. குடிநீர் தேவைகளுக்காகவும்மீன் வளர்ப்புக்காகவும் வைக்க வேண்டியுள்ளது. இந்த நீரைப் பாசனத்துக்கு விட முடியாது.

விவசாய வல்லுனர்கள் கொடுத்துள்ள அறிக்கைப்படி நடப்பு சம்பா பயிரைக் காப்பாற்ற தமிழகத்துக்கு குறைந்த அளவு 45டி.எம்.சியாவது வேண்டும்.

நம்பிக்கையற்ற இந்தச் சூழ்நிலையில் காவில் டெல்டாவின் மேல் பகுதியில் உள்ள பயிர்களையாவது காப்பாற்றியாக வேண்டும்.

07.01.2003ம் தேதி நிலவரப்படி கர்நாடக நீர்த் தேக்கங்களில் உள்ள பயன்படுத்தத் தக்க நீரின் இருப்பு 20 டி.எம்.சியாகும்.

காவிரிக் கண்காணிப்புக் குழு தமிழகத்துக்குப் பற்றாக்குறை என்று கணக்கிட்டுள்ள 18.8 டி.எம்.சி. நீரையாவது கர்நாடகம் விடவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் காவிரிப் பாசன விவசாயிகள் பட்டினியாலும் கடன்களாலும் தாங்க முடியாத துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய உரிய, நியாயமான நீரை கர்நாடகம் பல்வேறு தந்திரங்களால் மறுத்து வருவது இந்தியாவிலேயேஎங்கும் இதுவரை நடந்திராத மோசடி.

தங்களது பயிருக்கே முன்னுரிமை என்ற வாதத்தின் அடிப்படையில் கர்நாடகம் தண்ணீர் விடுவதை தாமதிப்பதையும்,மறுப்பதையும் நியாயப்படுத்தி வருகிறது. இதையெல்லாம் அசாத்திய பொறுமையோடு நாங்கள் தாங்கி வருகிறோம்.

இவ்வாறு ஜெயலலிதா தனது விளக்கமான அறிக்கையில் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் எதிர்ப்பு:

தமிழகத்துக்கு வெறும் 6 டி.எம்.சி. நீரை விடுவதற்குக் கூட கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீரை விட்டால் மீண்டும்போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் மிரட்ட ஆரம்பித்துள்ளன.

ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டே இந்த நீரைத் திறந்துவிட ஒப்புக் கொண்டதாகவும், ஏற்கனவே மின் உற்பத்திக்காகசிவசமுத்திரம் அணையில் இருந்து தினமும் திறந்துவிடப்படும் நீர் 900 கன அடி நீர் தமிழகத்துக்குப் போய்க்கொண்டிருப்பதாகவும் கூடுதலாக வெறும் 300 கன அடி நீரைத் தான் தரப் போவதாகவும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிளக்கமளித்துள்ளனர்.

விவசாயிகள் எதிர்ப்பு குறித்துக் குறிப்பிட்ட அவர், கிருஷ்ணா நதி நீரில் ஆந்திராவிடம் இருந்து நமது பங்கை உரிமையுடன்கேட்பது மாதிரி, காவிரியில் தனது உரிமையைக் கேட்க தமிழகத்துக்கும் உரிமை உண்டு. அதை நாம் மறுக்க முடியாது என்றார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X