விவசாயிகளுக்கு இலவச உணவுத் திட்டம் தொடங்கியது
சென்னை:
வறட்சியால் பாதிக்கப்பட்டு பட்டினியால் வாடி வரும் விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு கொண்டு வந்த இலவச மதியஉணவுத் திட்டம் இன்று தொடங்கியது.
சென்னை, தூத்துக்குடி தவிர 27 மாவட்டங்களில் இந்த இலவச உணவு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 26,074சத்துணவு மையங்களில் இந்த உணவு வழங்கப்பட்டது. இதற்காக விவசாயிகளின் குடும்பத்தினருக்கு கூப்பன்கள்வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய சாத்தான்குளத்தில் இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் அங்கு இந்த இலவச உணவுத்திட்டத்தை அமலாக்க தேர்தல் கமிஷன் தடை விதித்துவிட்டது. இதனால் அங்கு இத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு வேளை உணவு வழங்கும் வகையில் ஊராட்சி அலுவலகங்களில் கூப்பன்கள் வழங்கப்பட்டன.இதனை பெரும்பாலான விவசாயிகள் வாங்கவில்லை.
உணவு தானியத்தைத் தந்தால் வீட்டில் சமைத்துக் கொள்வோம், இப்படி பாத்திரம் ஏந்தி நிற்கத் தயாராக இல்லை எனபெரும்பாலான விவசாயிகள் கூறிவிட்டனர்.
ஆனால், எப்படியோ ஒரு வேளை உணவாவது கிடைக்கிறதே என்று மிக ஏழ்மையான விவசாயக் கூலிகள் இந்தக் கூப்பன்களைப்பெற்றுள்ளனர். அவர்களுக்கு இன்று இந்த இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கியது. இன்று திட்டத்தின் முதல் தினம்என்பதாலும், பொங்கல் பண்டிகை என்பதால் சர்க்கரைப் பொங்கலுடன் இத் திட்டம் தொடங்கியது.
சில இடங்களில் ஆளும் கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் இலவச உணவு பெறுவோர் பட்டியலில்சேர்த்துவிட்டு மற்றவர்களின் பெயர்களை வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதனால்கோபமடைந்த சில கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக உணவைப் பெற மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
ஆனால், இத் திட்டத்தின் குறைகளைக் களையவும், அதைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இத் திட்டத்தால் 20 லட்சம் விவசாயக் குடும்பங்கள் மதிய உணவைப் பெறுவார்கள் என்று அரசு எதிர்பார்த்தது.ஆனால், இதில் பாதி பேர் கூடக் கூப்பன்களை வாங்க முன் வரவில்லை.
-->


